திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல்: தலைவர் ஆனார் சேரன்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் 2026–2029 காலத்திற்கான தேர்தல் இன்று சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரன் தலைமையிலான ‘நம்ம கே. பாக்யராஜ்’ அணியும், இயக்குநர் வி.சி. குகநாதன் தலைமையிலான ‘திரைக்கதை மன்னன் பாக்யராஜ்’ அணியும் மோதின. பொதுச்செயலாளர் பதவிக்கு பட்டுக்கோட்டை பிரபாகரன், மனோஜ்குமார் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஆர். சுந்தர்ராஜன், லியாகத் அலிகான் ஆகியோரும் போட்டியிட்டனர்.

மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ‘நம்ம கே. பாக்யராஜ்’ அணி வெற்றி பெற்றுள்ளது. 12 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 279 வாக்குகள் பெற்று இயக்குநர் சேரன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். முதலில் இந்தத் தேர்தல் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் கே. பாக்யராஜின் மறைவைத் தொடர்ந்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

Suresh

Recent Posts

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

4 seconds ago

தந்தை விஜயைப் போலவே அமைதியாக… ஜேசன் சஞ்சயை புகழ்ந்த நடிகர் சூரி!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா நிறுவனம் மற்றும் ஜேசன் சஞ்சயின் JSK…

28 minutes ago

இளையராஜா இசையமைத்த மராத்தி படம் ‘கோந்தல்’ ஆஸ்கர் போட்டிக்கு தேர்வு!

கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற திரைப்படம் ‘கோந்தல்’. அறிமுக இயக்குநர் சந்தோஷ் திவாகர் இயக்கியுள்ள…

34 minutes ago

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

21 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

21 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

22 hours ago