Chennai International Film Festival: Sasikumar wins Best Actor award
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி நிறைவடைந்தது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்திய இந்த 23-வது பட விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
தமிழில் அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, காதல் என்பது பொதுவுடைமை, மெட்ராஸ் மேட்னி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், வேம்பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்ஷா, 3பிஹெச்கே ஆகிய 12 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் நடித்த சசிகுமாருக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது, ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்துக்காக லிஜோமோல் ஜோஷுக்கு வழங்கப்பட்டது. சிறந்த தமிழ்ப்படத்துக்கான விருது ராமின் ‘பறந்து போ’ படத்துக்கு வழங்கப்பட்டது.
மற்ற விருது விவரம்: இரண்டாவது சிறந்த படம் – டூரிஸ்ட் ஃபேமலி (இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்), சிறப்பு ஜூரி விருது- காளி வெங்கட் (மெட்ராஸ் மேட்னி), சிறப்பு ஜூரி விருது – ஷீலா ராஜ்குமார் (வேம்பு), சிறந்த ஒளிப்பதிவு – எஸ்.பாண்டி குமார் (அலங்கு) சிறந்த எடிட்டர் – நாகூர் ராமச்சந்திரன் (மாயக்கூத்து).
விழாவில் எம்ஜிஆர் அரசினர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தயாரித்த ‘கற்பி’ குறும்படத்துக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், ஸ்பெயின் நாட்டின் துணை தூதர் ஆண்டனி லோபோ, அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…