Categories: NewsTamil News

விட்ட இடத்தை பிடிக்கும் நடிகை… சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவுக்கு இவரா?

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

முதல் பாகத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக வந்தார். அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி, ஜோதிகா உடலுக்குள் புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதை அமைத்து இருந்தனர்.

சந்திரமுகி 2-ம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும் சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி. வாசு தெரிவித்துள்ளார்.

இதில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடிப்பாரா என்று எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து ஜோதிகாவிடம் கேட்டபோது சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை.

அந்த படத்தில் நடிக்கும்படி யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை என்றார். சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு சிம்ரன் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சந்திரமுகி-2 படத்தில் சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கனவே சந்திரமுகி படத்தில் சிம்ரன்தான் கதாநாயகியாக நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பிலும் பங்கேற்றார். ஆனால் திடீரென்று அவர் கர்ப்பமாகி படத்தில் இருந்து விலகியதால் ஜோதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

10 hours ago

குடும்பத்தினரால் வருத்தப்பட்ட அண்ணாமலை.. மன்னிப்பு கேட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

10 hours ago

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

1 day ago

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

1 day ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 day ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

1 day ago