chandramukhi 2 movie latest update
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என்ன பன்முகத் திறமைகளுடன் விளங்கி வரும் இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், மனோபாலா, கங்கனா ராணாவத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர இருப்பதாகவும் படகுழு சில தினங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இதனால் இப்படம் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில் புது அப்டேட்டாக இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் டப்பிங் பேசும் புகைப்படங்களை பதிவிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…