chandramukhi-2 heroine latest update
இயக்குனர் பி.வாசு அவர்களின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 2005-ஆம் ஆண்டில் வெளியான மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தான் “சந்திரமுகி”. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளதாக தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்திற்கான கதாநாயகியை தேடும் பணியில் படக்குழு சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான தகவலில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆண்ட்ரியா மற்றும் ராஷி கண்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முன்னணி ஹீரோயினாக திகழும் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே திரிஷா அவர்கள் நாயகி, மோகினி, அரண்மனை 2 போன்ற ஹாரர் படங்களில் நடித்துள்ளார். அதேபோல் இப்படத்தையும் ஏற்று நடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…