Cell Murugan to continue Vivek's dream project
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்களும் செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ. பி.எஸ். அவர்களும் திறந்து வைத்தனர்.
மேலும் விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் இன்று விவேக்’ஸ் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும் நடிகருமான செல் முருகன் இன்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நண்பர்கள் துணையுடன் தொடங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ. பி.எஸ்., நடிகர்கள் பாபி சிம்ஹா, உதயா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…