நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது போதைப்பொருளுடன் பிரபல நடிகை கைது

இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போதைப்பொருள் பிரிவு போலீசார் விசாரணையில் சுஷாந்த் சிங் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி கைதாகி பின்னர் ஜாமீனில் வந்தார்.

நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்தனர். கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோரும் போதைப்பொருள் வழக்கில் கைதானார்கள். சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கு நடிகை ஸ்வேதா குமாரியும் (27) போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளார்.

மும்பை போலீசார் நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது அவர் சிக்கினார். ஸ்வேதாவிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்வேதா குமாரி சில தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரிங் மாஸ்டர் என்ற கன்னட படத்திலும் நடித்து இருக்கிறார்.

மும்பை, தானே மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுடன் நடிகைக்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.

இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே கூறுகையில், “ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்வேதா குமாரிக்கு போதைப் பொருள் விற்கும் கூட்டத்துடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் வழக்கில் தென்னிந்திய நடிகை ஒருவர் கைதாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Suresh

Recent Posts

Yezhu Kadal Yezhu Malai Release Trailer

Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…

10 hours ago

Oru Chinna Panithuli Lyric Video

Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…

11 hours ago

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…

12 hours ago

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…

12 hours ago

தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…

12 hours ago

மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…

12 hours ago