வயிற்றில் அதிக அளவு உணவு இருக்கும் போது அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அதிக உணவு உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
அதிக கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது, இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். ‘அல்சர்’ எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி உண்ணும் போது ஜீரண மண்டலம் பாதிப்பு அடைந்து நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
அவசரம் அவசரமாக உணவை மென்று விழுங்கும் போது வயிற்றிற்கு வேலை அதிகமாவதால் அதுவும் நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே உணவை மெதுவாக மென்று விழுங்குவது மிகவும் நல்லது.
சிகரெட்டில் உள்ள நிகோடின் தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றை பலம் இழக்கச் செய்து, உணவு ஜீரணம் முழுமை அடையாமல் போவாதால் நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது.எனவே புகைபழக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…