பணம் மோசடி செய்ததாக பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தொடர்ந்த வழக்கு.. பிரபல நடிகை கொடுத்த பதில்

கருட வேகா சினிமாவை தயாரித்த ஜோஸ்டார் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் காவல் நிலையத்தில் ஜீவிதா மீது பணமோசடி புகார் ஒன்றை அளித்தார். இதற்கு ஜீவிதா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஜீவிதா, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். பின்னர், நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் வசித்து வருகிறார். ராஜசேகர், பூஜா குமார் நடித்த கருட வேகா படம் 2017-ல் திரைக்கு வந்தது. இந்த படத்தை தயாரித்த கோட்டீஸ்வர ராஜூ தற்போது அளித்துள்ள பேட்டியில், “ஜீவிதாவும் ராஜசேகரும் என்னிடம் ரூ.26 கோடி கடன் பெற்றனர். அதற்காக பூந்தமல்லி அருகே உள்ள 3 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து காசோலை கொடுத்தனர். ஆனால், எனக்கு தெரியாமல் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு ஜீவிதா விற்று விட்டார். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் ஜீவிதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது” என்றார்.

இதற்கு ஜீவிதா விளக்கம் அளித்து அவர் கூறும்போது, “கோட்டீஸ்வர ராஜூ தெரிவித்துள்ள கருத்தில் உண்மை இல்லை. கருடவேகா படத்துக்கு அவர்தான் தயாரிப்பாளர். பிறகு எப்படி அவர் எங்களுக்கு கடன் கொடுத்திருக்க முடியும்? அவர் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்க நினைக்கிறார். அதில் நான் சிக்கமாட்டேன். நான் பலவீனமானவள் அல்ல. வழக்கை சட்டப்படி சந்திப்பேன். யார் குற்றவாளி என்பது நீதிமன்றம் மூலம் தெரியவரும்” என்றார்.

Cash fraud case Actress Jeevitha explanation
jothika lakshu

Recent Posts

கல்யாணத்தை அறைந்த ஹரிதா.. சூர்யா சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 minutes ago

விஜயா கேட்ட கேள்வி.. சிந்தாமணி கொடுத்த பதில்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

5 hours ago

நான் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த அறிமுகம் காட்சி இதுதான்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…

22 hours ago

ஜனநாயகன் பிரச்சனை.. ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.!!

ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

22 hours ago

விஜய் மீது தொடரும் விமர்சனம்.. நடிகர் ஜான் விஜய் கொடுத்த பதில்..!

நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…

23 hours ago

Vishwanath and Sons TEASER (Tamil)

https://youtu.be/glU1Xc7dTKk?si=0VuCt-EXiR3RNwGc

23 hours ago