சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விஜயகாந்த். சோகத்தில் திரையுலகினர்

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் கேப்டன் விஜயகாந்த். அதன் பிறகு தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக் குறைபாடு காரணமாக வீட்டில் முடங்கி இருந்தார்.

கடந்த ஒரு மாதமாகவே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் ஓரளவிற்கு குணமடைந்து வீடு திரும்பினார். அதன் பிறகு தேமுதிகவின் பொதுச் செயலாளராக விஜயகாந்த் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார் பிரேமலதா விஜயகாந்த்.

இந்த நிலையில் மீண்டும் விஜயகாந்துக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் வெட்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை அறிவித்துள்ளது.

விஜயகாந்தின் மறைவு செய்தி திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் அஞ்சலி கூறி வருகின்றனர்.

captain-vijayakanth-passed-away
jothika lakshu

Recent Posts

ஒரே இடத்தில் இவ்வளவு Collections-ஆ? – வேலவன் ஸ்டோர்ஸில் சல்மா அருண் உற்சாக Shopping!

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…

14 hours ago

Trending சேலைகளை பார்த்து அசந்த சியமந்த கிரண்… வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாக Shopping!

சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…

14 hours ago

அன்பில் அவன் படத்தை தயாரித்ததில் பெருமை.. அசோக் செல்வன் நெகிழ்ச்சி!

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…

20 hours ago

ஜெயிலர் – 2 திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…

20 hours ago

அக்டோபர் 23-ல் வெளியாகும் ‘டெலிவரி பாய்’.. ஹீரோவாக அறிமுகமாகும் லியோ சிவகுமார்!

ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…

20 hours ago

ரசிகர்கள் உன்னுடன் இருப்பார்கள்… ஆனால் நீ சினிமாவில் நிலைத்து நிற்பாயா? – சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் வைத்த சவால்!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…

20 hours ago