Can't sleep after acting like a ghost - Kajal Agarwal
வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள வெப் தொடர் “லைவ் டெலிகாஸ்ட்”. இத்தொடர் வருகிற 12-ந் தேதி உலகெங்கும் ஓடிடி-யில் ஒளிபரப்பு ஆக உள்ளது. மாந்த்ரீக சக்திகள் நிறைந்த, ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் ஒரு தொலைக்காட்சி தொடர் ஒன்றை படமாக்கப்படும் போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே இந்த “லைவ் டெலிகாஸ்ட்”.
இத்தொடரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட காஜல் அகர்வால் “நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுத்த இடம் மிக மிக பொருத்தமானது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது. மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீட்டில் தான் பெரும்பாலும் படப்பிடிப்பு நடந்தது.
படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம் தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்க கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரம்மை என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும்” என்று திகில் மாறா உணர்வுடன் கூறினார்.
இந்த தொடரில் காஜல் அகர்வாலுடன் வைபவ், ‘கயல்’ ஆனந்தி, பிரியங்கா, டேனியல் போப், சுப்பு பஞ்சு அருணாசலம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…