bramma-mugurtham-poster-released update
“இயக்குனர் டி.ஆர். விஜயன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரம்ம முகூர்த்தம்’. விஜய் விஷ்வா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா நடித்துள்ளார். மேலும், மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், சி.ரங்கநாதன், அனுமோகன், விஜய கணேஷ், இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், கோதண்டம், அறந்தாங்கி சங்கர், சின்னத்திரை தளபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே.வி. மீடியா (KV Media) தயாரிப்பாளர் பி. செந்தில்நாதன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஶ்ரீ சாஸ்தா இசையமைக்கிறார். ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில் நடக்கும் கலவரங்களும் அதைக் கடந்து அந்த திருமணத்தை நடத்த, நாயகன் நடத்தும் போராட்டங்கள் என காமெடியுடன் கூடிய கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காடு ,சென்னை, திருவள்ளூர், ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதாக முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரம்ம முகூர்த்தம் போஸ்டர்இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த போஸ்டர் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…