Bollywood also wants a film like 'Master' - the choice of a famous director
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன.
அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு சமீபத்திய பேட்டியில், “தெற்கில் ‘மாஸ்டர்’ படம் வெளியாகி மக்களை திரையரங்கிற்கு வரவழைத்தது போல், பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும். அப்படி வந்தால் தான் இங்கும் திரையரங்குக்கு பொதுமக்கள் வருவார்கள் என கூறியுள்ளார்.
மேலும் தான் இயக்கிய ‘லூடோ’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி செய்ததாகவும், அது முடியாததால் வேறு வழியின்றி ஓடிடியில் வெளியிட உள்ளதாகவும் அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…