சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். இவரின் மர்ம மரணம் குறித்து தற்போது வரை சிபிஐ விசாரித்து வருகிறது.
சுஷாந்த் சிங்குக்கு தெரியாமலேயே அவருக்கு போதைப் பொருள் கொடுத்து மனநிலை பாதிக்க செய்ய முயற்சி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், பிரபல முன்னணி நடிகை தீபிகா படுகோன் இளம் நடிகை சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உட்பட நடிகைகள் பலர், கோவாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பார்ட்டி ஒன்றில், போதைப் பொருள் குறித்து ‘வாட்ஸ் அப்பில்’ உரையாடியுள்ள உண்மைகள் அம்பலமானது.
இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி, நடிகைகள் தீபிகா, சாரா, ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக சம்மன் அனுப்பினர்.
அதன்படி, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நேற்று காலை முன்னணி நடிகையான தீபிகா படுகோன் ஆஜரானார். அவரிடம் மும்பை உள்ள பிரபல அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகள் முன் பல மணி நேரம் தீவிர விசாரணை நடந்து வந்துள்ளது. அப்போது, தனது மேலாளருடன் போதைப் பொருள் குறித்து உரையாடியதாக தீபிகா படுகோன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இளம் நடிகைகள் சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூரிடம் பிரபல அலுவலகம் ஒன்றில் தனியாக விசாரணை நடந்தது. அப்போது, முன்னணி கம்பெனியில் முக்கிய நிர்வாகிகளுடன் சாரா உட்பட பலர் போதைப் பொருள் குறித்து பேசியதை அவர்கள் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி தற்போது இந்திய திரையுலகியே அதிரவைத்து வருகிறது. மேலும் இன்னும் போதை பொருளை பயன்படுத்தி வரும் சில நடிகர், நடிகைகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…