ப்ளூ ஸ்டார் திரை விமர்சனம்

அரக்கோணம் பகுதியில் வாழ்ந்துவரும் அசோக் செல்வனும் சாந்தனுவும் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அசோக் செல்வன் அணிக்கு கேப்டனாகவும் ஷாந்தனு ஆல்பா அணிக்கு கேப்டனாகவும் இருக்கிறார்கள். போட்டி என்று வரும் போது பல அணியுடன் மோதும் இருவரும் முன் பகை மற்றும் இரண்டும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை.இந்நிலையில் கோவில் திருவிழாவில் இரு அணியினரும் விளையாட முன் வருகிறார்கள். அந்தப் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக சாந்தனு பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை அழைத்து வருகிறார். போட்டியில் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் அணியினர் தோல்வி அடைகின்றனர்.மகிழ்ச்சியில் இருக்கும் சதான் அழைத்து வந்த வீரர்களுக்கு கூறியபடி பணத்தைக் கொடுக்க அவர்களின் கிளப்புக்கு செல்கிறார்.

அங்கு, அவரைக் கடுமையாக அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். இதை பார்க்கும் அசோக் செல்வன், சாந்தனுக்கு ஆதரவாக களம் இறங்குகிறார்.ஒருகட்டத்தில் ப்ளூஸ்டார் அணியும் ஆல்பா அணியும் ஓர் அணியாக மாறுகிறது. இறுதியில் இருவரும் சேர்ந்து எதிர் அணியை எப்படி எதிர் கொண்டார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வனுக்கு இந்த படமும் சிறப்பாக அமைந்து இருக்கிறது. கிராம பின்னணி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

சாந்தனுவுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது இருக்கிறது. இருவரும் சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்கள்.அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைக்கப்பட்டிருப்பதும் ‘ரயிலின் ஒலிகள்’பாடலும் ரசிக்க வைக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.இயக்கம்விளையாட்டை மையமாக வைத்து இரு சமூகத்தின் வேற்றுமை ஒற்றுமையை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் ஜெயக்குமார். ஒரு சில இடங்களில் திரைக்கதை வலுவில்லாமல் நகர்ந்து இருக்கிறது. வசனங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கிறது.

blue-star movie review
jothika lakshu

Recent Posts

ஒரே பாடலுக்கு ரூ.1 கோடியா? கீர்த்தி சுரேஷின் சம்பளம் பேசுபொருள்!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து…

3 minutes ago

“சாதி, மதத்தை அல்ல… மனிதநேயத்தைப் பெருமைப்படுங்கள்!” – நடிகை மீனாவின் பதிவு வைரல்

பிரபல தென்னிந்திய நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப்…

10 minutes ago

மோகன்லால் மகள் விஸ்மயாவின் அறிமுக படம்… ‘துடக்கம்’ டிரெய்லர் வெளியீடு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.…

37 minutes ago

அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…

5 hours ago

கஜினி வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்… திரையுலகம் இரங்கல்!

மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…

6 hours ago

The One Rule Lyric Video

The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

1 day ago