‘Bigil’ movie actress paired with Big Boss Kavin in the web series
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்துள்ள ‘லிஃப்ட்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படத்தை வெளியிட உள்ளனர். இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், நடிகர் கவின், அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். இந்த வெப்தொடரில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார்.
மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட், மேகி ஆகியோர் இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். குணா பாலசுப்ரமணியம் இசையமைக்கும் இத்தொடருக்கு சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த வெப்தொடரை கஸ்துபா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் சோனியா ராம்தாஸ் தயாரிக்கிறார்.
முருங்கைக் கீரை பொரியல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
எழுத்தாளர் வாசன் எழுதி உருவாக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரது உண்மை வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த தாக்கங்களால் ஏற்படும் சிக்கல்களில்…
கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக…
சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது…
ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…