Bigg Boss Ultimate Promo
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி முடிந்ததைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ள வனிதா ஆரம்பம் முதலே சக போட்டியாளர்களிடம் முரண்பாடாகவே இருந்து வருகிறார். நேற்று என்னால் இனிமேல் இந்த வீட்டில் இருக்க முடியாது என ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிக் பாஸ் சீசன் கதறியழுத நிலையில் நீங்கள் யாரையும் நம்பி இந்த வீட்டிற்கு வரவில்லை தைரியமாக விளையாடுங்கள் என பிக்பாஸ் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் இன்றைக்கான எபிசோடுகள் வெளியாகியுள்ள ப்ரோமோவில் சாப்பாடு விஷயத்தில் வனிதா மற்றும் தாமரை இடையே மோதல் உருவாகியுள்ளது. வனிதா சாப்பாட்டை குறை சொல்ல பதிலுக்கு தாமரையும் குறை சொல்கிறார்.
என்னையும் என் சாப்பாட்டையும் பற்றி குறை சொல்லாத என வனிதா சொல்ல நீங்களும் என்னைப் பற்றி குறை சொல்லாதீங்க என தாமரை பதிலடி கொடுக்கிறார். பிறகு சாப்பாடு நல்லா இல்லையா என தாமரை கேட்க பாலாஜி முருகதாஸ் நல்லா இருப்பதால் தான் இரண்டாவது முறை சாப்பிடுகிறேன் என்று கூறி வனிதாவுக்கு பல்ப் கொடுக்கிறார்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…