Bigg Boss Tamil Day 3 Promo
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்படுவதற்கு காரணம் அதில் நடக்கும் சண்டைகள் தான். அந்த வகையில் தற்போது நடந்து வரும் 5-வது சீசனில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள புரோமோ மூலம் அது உறுதியாகி உள்ளது.
‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு தற்போது ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேச வேண்டும். நேற்று இசைவாணி, சின்னப் பொண்ணு ஆகியோர் தங்களது கதைகளை சொன்ன நிலையில், இன்று இமான் அண்ணாச்சி தனது கதையை கூறுவது போன்ற காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.
அதில், ‘பிக்பாஸ் டைட்டிலை ஒரு நகைச்சுவை நடிகர் வென்றால் நன்றாக இருக்கும்’ என்று இமான் அண்ணாச்சி கூற, அவரது பேச்சிற்கு சிரித்ததாக நிரூப் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சினை வருகிறது.
இதையடுத்து நமீதா ’கஷ்டப்படுறோம் கஷ்டப்படுறோம் என்று யாரும் சொல்ல வேண்டாம், கஷ்டப்பட்டால் தான் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல முடியும்’ என்று கூறுகிறார். இன்னொரு புறம் நிரூப் மற்றும் அபிஷேக் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. இதைக் கேட்டு சிபி சக்கரவர்த்தி மீண்டும் ஆவேசமாக, கடைசியில் நமீதா ’வீட்டில் சண்டை ஆரம்பிக்க போகுது’ என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரோமோ முடிவடைகிறது. மொத்தத்தில் இன்றைய எபிசோடில் காரசாரமான சண்டை நடக்கும் என்பது மட்டும் முதல் புரோமோவின் மூலம் தெரியவருகிறது.
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…