பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நேரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. ஏழு சீசன்களையும் தொகுத்து வந்த உலகநாயகன் கமல்ஹாசன் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிறிது ஓய்வு பெறுவதாக கமல் அறிக்கை ஒன்றை அறிவித்திருந்தார் இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவரைத் தவிர யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்தது.
அந்த நேரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது. அது குறித்து இரண்டு ப்ரோமோக்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க இருப்பதாக அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டு உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போவது யார் யார் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…