Bhoomi Release Update
ஜெயம் ரவியின் 25-வது படம், ‘பூமி’. லட்சுமண் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார்.
பூமி படத்தை கடந்த மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை. திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால், இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.
ஆனால் அதில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். அது என்னவென்றால், பூமி படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக சன் டிவி-யில் ஒளிபரப்ப உள்ளார்களாம்.
இதற்காக பெருந்தொகை கொடுக்கப்பட்டுள்ளதாம். டிவி-யில் ஒளிபரப்பிய பின்னரே சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…