bharathiraja about movie release
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் அறிவித்தார். அதில் வருகிற நவம்பர் 10-ந் தேதி முதல் உரிய கட்டுப்பாடுகளுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் வி.பி.எப் என்ற திரைப்பட ஒளிபரப்பு கட்டணத்தை செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒருமுறை கட்டணத்தை மட்டுமே செலுத்த முடியும். ஒரே ஒரு முறை வி.பி.எப் கட்டணத்தை செலுத்தும் முறைக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே படங்களை வெளியிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…