bharathikannamma serial episode update 04-01-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாரதியும் கணேசனும் ரூமில் தனியாக இருக்க அப்போது லட்சுமி ஓடி வருகிறார். உங்கள பார்க்கணும் போல இருந்துச்சு உங்ககிட்ட பேசணும் போல இருந்துச்சு அதனால தான் வந்தேன் என சொல்கிறார். மேலும் யாருக்கும் தெரியாம தான் வந்தேன். ஆனா எல்லோரும் பாக்குற மாதிரி நான் உங்களோட சந்தோஷமா பேசி பழகணும் உங்களோட சேர்ந்து சாப்பிடணும் எனவும் அதற்காக ஏதாவது பண்ணுங்க என லட்சுமி பாரதியிடம் சொல்ல பாரதி யோசித்து ஒரு ஐடியா கூறுகிறார்.
மறுநாள் பாரதி கண்ணம்மா வீட்டுக்கு சென்று இன்னைக்கு வீகென்ட் குழந்தைங்கள என்னோட கூட்டிட்டு போக வந்தேன் என சொல்ல யாரும் உங்களோட வர மாட்டாங்க நீங்க கிளம்புங்க என கண்ணம்மா சொல்கிறார். அதை குழந்தைங்க சொல்லட்டும் என சொல்ல கண்ணம்மா இருவரையும் அழைக்க ஹேமா நாளா உங்களோட வரமாட்டேன் கிளம்புங்க என சொல்ல பாரதி லட்சுமி ஒரு வார்த்தை சொல்லிட்டா நல்லா இருக்கும் என கூறுகிறார்.
இந்த நேரத்தில் லட்சுமி ஸ்டைலாக வந்து நிற்க கண்ணம்மா ஹேமா என இருவரும் திரும்பி பார்க்க லட்சுமி ஹாய் டாடி என பாரதியுடன் வந்து கொஞ்சி பேசுகிறார். உனக்கு புருஷன் வேணான்னு முடிவு பண்ணலாம் ஆனால் எங்களுக்கு அப்பா வேணாம்னு நீ எப்படி முடிவு பண்ண முடியும்? ஹேமா அப்பாவோட பத்து வருஷம் இருந்ததுனால அவருக்கு ஆசை இல்லாமல் இருக்கலாம் ஆனா எனக்கு அப்பா வேணும், நான் ஒரு நாள் கூட அப்பாவோட இருந்ததில்லை என சொல்லி பாரதியோட கிளம்புகிறார்.
பிறகு லட்சுமி ஐஸ் கிரீம் கேட்க பாரதி வாங்கி கொடுக்க எல்லோரும் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அதை பார்த்து கண்ணம்மா ஓடி வந்து குழந்தையை கூட்டிட்டு வந்த உங்களுக்கு எப்படி பார்த்துக்கணும்னு தெரியாதா என சண்டை போடுகிறார். ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்திருக்கீங்க நாளைக்கு சளி பிடிக்கும் ஜுரம் வரும் என்று தெரியாதா எனக்கிட்ட அவ என் பொண்ணு உனக்கு எப்படி அக்கறை இருக்கும் அதே மாதிரி எனக்கும் இருக்கு ஒரு வேலை அவளுக்கு சளி ஜூரம் வந்தா என்ன மாத்திரை தரவேண்டும் எப்படி சரியாக்கனும்னு எனக்கு தெரியும் என சொல்லி அனுப்பி வைக்கிறார்.
லட்சுமி பாரதியோடு போனதுனால ஹேமா லட்சுமி மேல கோபமா இருக்கேன் இனி அவகிட்ட பேசவே மாட்டேன் அவங்க முகத்துல முழிக்க மாட்டேன் என சொல்ல தாமரை அப்படியெல்லாம் பண்ணக்கூடாது அவளுக்கு அப்பாவோட இருக்கணும்னு ஆசை அதனால போயிருக்கா ரெண்டு நாள் கழிச்சு இங்கதான் வரப்போறா என சமாதானம் செய்கிறார்.
அதன் பிறகு பாரதி, லட்சுமி மற்றும் கணேசன் என மூவரும் கண்ணம்மாவின் மனதை எப்படி மாற்றலாம் என யோசித்துக் கொண்டிருக்க அப்போது கணேசன் கணவனே கண்கண்ட தெய்வம் அந்த மாதிரி ஏதாவது நாடகம் போடலாம் என்று சொல்ல எதுவும் காரணம் இல்லாமல் எப்படி நாடகம் போடுவது என யோசிக்க லட்சுமி இன்னைக்கு பாட்டியோட நினைவு நாள் என சொல்ல பாரதி என் மாமியார் நினைவு நாளை கொண்டாடி கண்ணம்மா மனசை மாற்றலாம் என முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…