உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பாரதிராஜா..

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமயமாக கொண்டாடப்பட்டு வருபவர் பாரதிராஜா. பல்வேறு படங்களை இயக்கிய இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் என இரண்டு படங்களில் நடித்திருந்தார்.

தற்போது உடல் நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.


bharathi-raja-request-to-fans
jothika lakshu

Recent Posts

வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

16 hours ago

கம்ருதீன் மற்றும் கெமி இடையே ஏற்பட்ட பிரச்சனை.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றை பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…

21 hours ago

இட்லி கடை : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 5 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

22 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுரேகா சொன்ன பதில், சூர்யா எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு…

22 hours ago

முதல் நாளில் நடந்த நாமினேஷன் டாஸ்க்.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

பிக் பாஸ் முதல் ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று…

23 hours ago

முத்து போட்ட பிளான், மனோஜ் சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ்…

23 hours ago