bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா ஆஸ்பத்திரியில் வந்து பிரசவம் பார்த்து டி என் ஏ டெஸ்ட் எடுத்து புருஷனோடு சேர்ந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது அந்தப் பெண்மணி தன்னுடைய கணவர் டி என் ஏ ரிசல்ட் பார்த்த பிறகும் அது நீ பணம் கொடுத்து உருவாக்கின ரிப்போர்ட் என சந்தேகப்படுகிறார். அதனால இனிமேலும் அவரோட சேர்ந்து வாழ முடியாது என முடிவு செய்து விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறேன் என பேசுகிறார்.
இதைக் கேட்ட பாரதி தன்னுடைய டெஸ்ட் ரிசல்ட் இன்னும் எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது. அதற்கேற்றார் போல இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.
இந்த பக்கம் ஹேமா மற்றும் லட்சுமி என இருவரும் வீட்டில் இருக்கும்போது ஹேமா லட்சுமியின் கையை எடுத்து தன்னுடைய தலை மீது வைத்து பொய் சொல்லாம சொல்லு உனக்கு அப்பா யார் என்று தெரியும் தானே என கேட்க லட்சுமி தெரியும், ஆனா அம்மா உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. என்கிட்ட கேட்டு தொந்தரவு பண்ணாத நானே தான் அப்பா யாருன்னு கண்டுபிடிச்சேன் அதே போல நீயே கண்டுபிடி என கூறுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் ஹேமா இனி யாரிடமும் கேட்கக்கூடாது நானே கண்டுபிடிக்கிறேன் என முடிவு செய்கிறார்.
பிறகு பாரதி டிஎன்ஏ டெஸ்ட் கிளினிக்கு ஃபோன் செய்து நானே நேரடியா டெல்லி போய் ரிசல்ட் வாங்க முடியுமா என கேட்க அவர்களும் போய் வாங்கிக் கொள்ள முடியும் என சொல்ல உடனடியாக டில்லி போக முடிவெடுக்கிறார். அதற்காக பிளைட் டிக்கெட்டையும் புக் செய்கிறார்.
அடுத்ததாக சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் போட்டு ஹேமா எப்படி இருக்கா பாரதிய மிஸ் பண்றாளா என கேட்க அவர பத்தி பேசறது இல்ல ஆனா வேறு விதமா அவரை பற்றி கேட்கிறா என சொல்ல சௌந்தர்யா குழம்புகிறார். பிறகு கண்ணம்மா ஹேமா தன்னுடைய அப்பா யாரு என கேட்கும் விஷயத்தை சொல்ல சௌந்தர்யா பாரதி தான் என்ற உண்மையை சொல்ல வேண்டியது தானே? என சொல்ல ஏற்கனவே பாரதி மேல ரொம்ப கோபமா இருக்கா இந்த நேரத்துல இத சொன்னா அவர் மேல வெறுப்பு தான் வரும் இப்படியே போகட்டும் நேரம் வரும்போது சொல்லிக்கலாம் என கண்ணம்மா கூறுகிறார். சௌந்தர்யாவும் நீ சொல்றது சரிதான் அப்படியே பண்ணி என கூறி போனை வைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…
கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…