bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஸ்கூலில் சில தோழிகள் ஹேமாவை சீனு என அழைக்க கோபப்படும் லட்சுமி அவர்களுடன் சண்டை போட மிஸ் நாளைக்கு வரும்போது நீங்க 5 பேரும் பேரண்ட்ஸோட தான் வரணும். அதுவரைக்கும் உங்கள கிளாஸ் உள்ள விடமாட்டேன் என சொல்லி விடுகின்றனர்.
அடுத்ததாக வெண்பா பாரதியை ஒரு இடத்தில் சந்தித்து நான் ஒரு மாதத்திற்கு முன்னர் பப் ஒன்றிற்கு சென்று இருந்தேன். அங்கே என் பிரண்டு கூட தான் டான்ஸ் ஆடினேன் அப்புறமா அவ கிளம்பிட்டா எனக்கு ஒரு ஜூஸ் கொடுத்தாங்க அது குடிச்சதும் நான் மயங்கிட்டேன் மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது ஹோட்டலில் ஒரு ரூமில் நான் அலங்கோலமாக இருந்தேன். யாரோ என்னை நாசம் பண்ணிட்டாங்க. அது யாருன்னு தேடியும் கிடைக்கல.
இப்போ என் வயித்துல ஒரு குழந்தை வளருது அதை கலைக்கவும் மனசு வரல. ரோஹித் கண்டிப்பா இதை ஏத்துக்க மாட்டான் அவனுக்கு பின்னாடி விஷயம் தெரிந்தால் என்ன விட்டுட்டு போயிடுவான். எனக்கு நீ தான் உதவி பண்ணனும் என சொல்ல பாரதி என்ன உதவி சொல்லு என கேட்கிறார். எனக்கும் என் குழந்தைக்கும் ஒரு அங்கீகாரம் வேண்டும், அப்பா வேண்டும். தயவு செய்து என் கழுத்துல நீ தாலி கட்டு ஊரறிய இல்லனாலும் ஊரோரம் ஏதாச்சு ஒரு கோவில்ல தாலி கட்டு அதோட நான் எங்கேயாவது போயிட்டு கண்ணுக்கு தெரியாம வாழ்ந்துகிறேன் என சொல்ல பாரதி அதிர்ச்சியடைகிறார்.
யாரோ பெத்த பிள்ளைக்கு யார் அப்பாவாக இருக்கறது. இதெல்லாம் கனவுல கூட நடக்காது என பாரதி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு வெண்பா உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் என திட்டம் தீட்டுகிறார்.
அடுத்ததாக லட்சுமி வீட்டுக்கு வந்து கண்ணம்மாவிடம் ஸ்கூலில் நடந்த சண்டை குறித்து சொல்ல அவர் திட்டுகிறார். பிறகு இனிமே இப்படி பண்ண கூடாது என அறிவுரை சொல்லி படிக்கச் சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…
கல்லூரி மாணவர்கள், அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், மர்மங்கள், காதல், நகைச்சுவை என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. கல்லூரியில்…
பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் இன்று காலை காலமானதாக வெளியான செய்தி, திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen