bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் தீவிரவாதிகள் வைத்த கோரிக்கையை அரசு தரப்பு மொத்தமாக நிராகரித்ததாக போலீஸ் தரப்பு சொல்ல கோபமடையும் தீவிரவாதிகள் லட்சுமி மற்றும் ஹேமாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டியுள்ளனர். மதியம் 12 மணிவரை தான் டைம். இல்லனா ஒவ்வொரு உயிரா போய்கிட்டே இருக்கும் என மிரட்டுகின்றனர். இதனால் சௌந்தர்யா ஒரு பக்கம் கதறி துடிக்கிறார்.
பிறகு போலீஸ் தரப்பு வெளியே தூக்கி வீசப்பட்ட தீவிரவாதியின் உடலை போஸ்ட் மாடத்திற்கு அனுப்ப முடிவு செய்ய அப்போது அதிகாரி பாடியை செக் பண்ணீங்களா என கேட்கிறார். அடுத்து பாடி செக் செய்யும்போது கண்ணம்மா அதில் மருத்துவமனைக்குள் புகுந்து தீவிரவாதிகளை தாக்க இருக்கும் வழியை பற்றி எழுதி இருக்கிறார். மேலும் ஒரு தீவிரவாதி குடும்பம் குறித்த தகவல்களையும் எழுதி இருக்கிறார். இதனைப் பார்த்த போலீஸ் தரப்பு பிரில்லியன்ட் ஐடியா என மகிழ்ச்சியடைகின்றனர்.
இந்த பக்கம் கண்ணம்மா லட்சுமி மற்றும் ஹேமாவை சமாதானப்படுத்தி படுக்க வைத்து விட்டு அஞ்சலி ஒருத்தர் மேல ஒருத்தர் இவ்வளவு பாசமாய் இருக்காங்க என பேச இல்லாம இருக்குமா ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே வயதில் பத்து மாசம் வளர்ந்து பிறந்தவர்களாச்சே என சொல்ல இந்த விஷயத்தை லட்சுமி கேட்டு விடுகிறார். லட்சுமி நானும் ஹேமாவும் ஒன்னா பொறந்தவளா என கேட்க கண்ணம்மா ஒரு கட்டத்தில் ஆமாம் என்று சொல்ல லட்சுமி மகிழ்ச்சியடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…