bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பங்க்ஷன் முடிந்து வீட்டுக்கு வந்த சௌந்தர்யா ஒரே இருட்டாக இருக்கிறது நமக்கு முன்னாடி கிளம்பிய பாரதி இன்னும் வீட்டுக்கு வரல போலையே என சொல்லிக் கொண்டிருக்க அப்போது மின்னல் வழியில் பாரதி இருட்டில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்து குடும்பமே அதிர்ச்சடைகின்றனர்.
பிறகு எல்லோரும் பாரதி பக்கத்தில் வந்து உட்கார இத்தன வருஷமா எனக்கே தெரியாம என்னை ஏமாற்றி இருக்கீங்க. எனக்கு யார் துரோகம் செய்திருந்தாலும் அதை மறந்திடுவேன் மன்னிச்சிடுவேன் ஆனா என்னுடைய அப்பா அம்மா கூட பொறந்த தம்பின்னு சொந்த ரத்த பந்தமே துரோகம் பண்ணி இருக்கீங்க. அத்தனை பேரும் முன்னாடி அவ என்ன நிக்க வச்சு கேள்வி கேட்கும் போது என் நடு முதுகுல குத்துன மாதிரி இருந்துச்சு. இப்ப எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க ஹேமா என்னுடைய பொண்ணு அதுல எந்த மாற்றமும் கிடையாது. என்கிட்ட இருந்து ஹேமாவை யாராவது பிரிக்க நினைச்சா அந்த நாள் தான் இந்த உலகத்துல நான் வாழ்கிற கடைசி நாளாக இருக்கும்.
இப்பவே என் பொண்ண கூட்டிகிட்டு இந்த உலகத்துல கண் காணாத இடத்துக்கு போய் என்னால வாழ முடியும். ஆனா அவ இந்த வீட்ல இருக்க எல்லாரும் மேலேயும் ரொம்ப பாசமா இருக்கா. அவளுக்கு பாப்பா பாட்டு சித்தப்பா சித்தி நீ எல்லாரும் வேணும் அதற்காக மட்டும் தான் நான் இங்கே இருக்கேன் என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார். பாரதியின் இந்த பேச்சைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த பக்கம் லட்சுமி உண்மையாகவே இது ஹேமாவின் அம்மா தானா என்ற சந்தேகத்தில் இது பற்றி கண்ணம்மாவிடம் பேச அவர் எரிந்து விழுகிறார். இதனால் லட்சுமிக்கு சந்தேகம் வருகிறது. அப்போ ஏமாவட அம்மா யாரும் எனை நானே தேடி கண்டுபிடிக்கிறேன் என முடிவு செய்கிறார்.
இந்தப் பக்கம் ஹேமா தூங்கிக் கொண்டிருக்க பக்கத்தில் வந்த பாரதி ஹேமாவுடனான நினைவுகள் அனைத்தையும் அசை போடுகிறார். நீ இல்லாம என்னால இந்த உலகத்துல வாழ முடியாது யாருக்காகவும் எதுக்காகவும் உன்ன விட்டுக் கொடுக்க மாட்டேன். உன்னையும் என்னையும் பிரிக்க வந்தா நான் சும்மா இருக்க மாட்டேன் என பேசுகிறார். ஹேமா தூக்கத்தில் தன்னுடைய அம்மா அழகாக இருப்பதாகவும் அம்மாவை காட்டிய பாரதிக்கு நன்றி எனவும் கூறுகிறார். இப்படியாக இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…