லஷ்மி நடவடிக்கையால் கண்ணம்மாவிற்கு வந்த சந்தேகம்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பஸ்ஸில் ஏறி வேகம் ஒரு சந்தோஷமான லட்சுமி, ஹேமா டான்ஸ் ஆடுறோம் என இருவரும் வாத்தி கம்மிங் பாட்டுக்கு டான்ஸ் ஆடுகின்றனர்.

அதன்பிறகு லட்சுமி கண்ணம்மாவை சீட்டிலிருந்து எழுந்து அம்மாவை உட்கார சொல்லிவிட்டு பக்கத்தில் அவர் உட்கார்ந்து கொள்கிறார். நாங்க ரெண்டு பேரும் ஒன்னா உக்காந்தே ஜாலியா பேசிட்டு வருவோம் என சொல்லி கண்ணம்மாவை பாரதி பக்கத்தில் உட்கார சொல்கிறார். இதனால் கண்ணம்மா ஷாக்காகி எங்க உக்காந்துட்டு இருந்தியோ நீ அங்கேயே உக்காரு என கூறுகிறார். லட்சுமி முடியாது என கூறி விடுகிறார். பிறகு பிரேக் போட கண்ணம்மா தவறி பாரதி மேல விழுகிறார். அதன்பிறகு பாரதி பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறார். பின்னர் ஆளுக்கு ஒரு கடி ஜோக் சொல்லி என்ஜாய் செய்கின்றனர்.

இந்த பக்கம் சௌந்தர்யா தன்னுடைய கணவருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க போது போன் வந்ததால் அவருடைய கணவர் எழுந்து சென்றுவிட இந்த நேரத்தில் சௌந்தர்யாவுக்கு மெசேஜ் வருகிறது. ஹலோ என மெசேஜ் வர மீண்டும் ஹலோ என அனுப்புகிறார். யார் என தெரியாமல் சௌந்தர்யா குழம்பி தன்னுடைய தோழிகளாக இருக்கும் என ஒவ்வொரு எதுவும் பெயராக அனுப்ப கடைசியில் நான் பெண்ணில்லை ஆண் என கூறுகிறார். நீயாக கண்டுபிடிக்கும் வரை நான் யார் என சொல்ல மாட்டேன் என அந்த மர்ம நபர் கூறுகிறார். இதனால் யாராக இருக்கும் என குழப்பம் அடைகிறார் சௌந்தர்யா.

இந்த பக்கம் ஒரு தீம் பார்க்கிற்கு சென்று இறங்குகின்றனர். பிறகு கண்ணம்மா லட்சுமி அழைத்து நீ எதுக்கு வித்தியாசமாக நடந்துக்கிற? எதுக்கு பாரதி வீட்டுக்கு போன? ஏன் அவரை டாக்டர் அப்பானு கூப்பிடுற என கேட்கிறார். அதுவும் நம்ம வீடு தானே என லட்சுமி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் கண்ணம்மா. நீ அப்படித்தானே சொல்லுவ தாத்தா பாட்டி சித்தப்பா சித்தினு அதைத்தான் நானும் சொன்னேன் என கூறுகிறார்.

மேலும் ஹேமா உன்ன சமையல் அம்மான்னு கூப்பிடுறா அதே மாதிரி நான் அவரை டாக்டர் அப்பானு கூப்பிடுறேன் என்ன தப்பு இருக்கு. ‌ நமது ஓகே ன்னு சொல்லிட்டாரு நீ எதுக்கு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்க என சொல்கிறார்.

பிறகு ஸ்கூலில் ஒரு ஃபார்ம் ஃபில் பண்ணி கொடுக்க சொல்ல லட்சுமி அதில் அப்பா பெயர் என இருக்கும் இடத்தில் பாரதி என எழுதுகிறார். இதைப்பார்த்து கண்ணம்மா மீண்டும் அதிர்ச்சியாக எதுக்கு பாரதினு எழுதற என கேட்கிறார். நீதானே சொல்லி இருக்கே ஒரு முறை அப்பா பேரு பாரதினு, அப்போ அது தான் எழுதனும் என கூறுகிறார். இதனால் கண்ணம்மாவுக்கு லட்சுமிக்கு ஏதோ விஷயம் தெரிந்து விட்டது என சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 31.03.22
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன விஷயம், வாட்டர் மெலன் கொடுத்த பதில் வெளியான இரண்டாவது ப்ரோமோ

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

55 minutes ago

டியூட்: 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…

1 hour ago

ஒன்று சேர்ந்த சீதா,மீனா.. முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…

2 hours ago

மாதவி சொன்ன வார்த்தை, சூர்யாவிடம் உண்மையை சொன்ன ரஞ்சிதா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

3 hours ago

விஜய் பார்வதி மற்றும் பிரவீன் உருவான பிரச்சனை..வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

3 hours ago

Azhagiyaley video song

Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…

4 hours ago