ஷர்மிளா வெண்பாவிற்கு கொடுத்த ஷாக்.. கடுப்பான பாரதி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சீரியலின் இன்றைய எபிசோட்டில் வெண்பாவின் அம்மா பாரதிக்கு சப்போர்ட் செய்து பேசுவதை நிறுத்து. நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எனக்கு நீர் வார்த்துக் கொடுத்து இருக்க‌‌. நல்லபடியா கல்யாணத்துக்கு தயாராகிற வேலையை பாரு என கூறுகிறார். நான் பாரதியை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் அவருக்காகத்தான் பத்து வருஷமாக காத்திருக்கேன் என ஊருக்கே தெரியும். அப்படி இருக்கும்போது நாளைக்கு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் விஷயம் தெரிஞ்சு என்கிட்ட இதையெல்லாம் கேட்டால் என் வாழ்க்கை கெட்டு போய் விடாதா என கூறுகிறார். இதைக் கேட்ட ஷர்மிளா எல்லாத்துக்கும் ஒரு வேலை இருக்கு நான் பார்க்கிற பையன் ஒரு நாளும் உங்கிட்ட பாரதியைப் பற்றி கேட்க மாட்டான் அதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன் என கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட வெண்பா அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைகிறார். இந்த கல்யாணத்தை எப்படி தள்ளிப் போடுவது என யோசிக்கிறார்.

இந்த பக்கம் மருத்துவமனைக்கு ஆட்டோவில் ஒரு தம்பதியினர் பதறியடித்துக் கொண்டு ஓடி வருகின்றனர் என்னுடைய மனைவிக்கு அடிபட்டுருச்சி, அவளை காப்பாத்துங்க எனது கணவர் கதறி அழுகிறார். அடிபட்ட பெண்ணை சிகிச்சைக்காக உள்ளே அனுப்பி விட்டு அவருடைய கணவரை அமரவைத்து விவரங்களை கேட்டு அறிகிறார் கண்ணம்மா. எப்படி அடிபட்டிச்சு என கேட்க அவர் துணி காய வைத்து விட்டு வரும்போது மாடிப்படிக்கட்டில் தவறிக் கீழே விழுந்து அடிபட்டு விட்டது என கூறுகிறார்.

உள்ளே சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது பாரதி எப்படி அடிபட்டது எனக் கேட்க அந்தப் பெண்மணி வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது கண்ணாடி பொருள் மேலே விழுந்து அடிபட்டு விட்டது என கூறுகிறார். இருவரும் வேறு வேறு பதில் சொல்வதைக் கேட்ட கண்ணம்மாவில் சந்தேகம் வந்து விஷயத்தை பாரதியிடம் கூறுகிறார். பிறகு உண்மையில் உங்களுக்கு எப்படி அடிபட்டிச்சு எதையும் மறைக்காம சொல்லுங்க என கேட்கிறார்.

என்ன உங்க கூட பொறந்த தங்கச்சியா நெனச்சு சொல்லுங்க என கண்ணம்மா கூறுகிறார். பிறகு என் புருஷன் தான் இதற்கு காரணம். நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ஆனா அவர் எந்த வேலைக்கும் போக மாட்டார் போற இடமெல்லாம் பிரச்சனை பண்ணிட்டு நாலு நாள்ல வேலையை விட்டு விடுவார். குடும்பத்துக்காக நான்தான் வேலைக்குப் போய் சம்பாதித்து கொண்டு வருவேன். எனக்கு டைப்பிங் தெரியும் இப்போ ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டேன். டைப் பண்ணுவதற்கு ஏற்றாற்போல தினமும் சம்பளம் கிடைக்கும். ஆனால் அவர் உனக்கு எப்படி இவ்வளவு பணம் வருது? அப்படி எதை காட்டி மாயக்கண்ணன் என அசிங்க அசிங்கமாக என்னை சந்தேகப்பட்டு பேசி அடித்து சித்திரவதை படுத்துகிறார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னுடைய குழந்தைகளுக்கும் இதே கதிதான் என மிரட்டுகிறார். அதனால் உண்மையை சொல்லவில்லை என கூறுகிறார்.

பிறகு பாரதி அந்த பெண்மணியின் கணவரிடம் சென்று இது பற்றி பேசும்போது சொல்லிட்டாளா, எதையும் சொல்லக்கூடாது என மிரட்டி தானே கூட்டிட்டு வந்தேன். வீட்டுக்குப் போய் அவளுக்கு இருக்கு என பேச பாரதி அவரை திட்டுகிறார். என்ன உன்னையும் கரெக்ட் பண்ணி விட்டால் எவ்வளவு கொடுத்த அவளுக்கு என அசிங்கமாக பேச பாரதி அவரை அடிக்கப் போகிறார். பிறகு கண்ணம்மா உங்கள எல்லாம் சும்மா விடக்கூடாது. பெண்கள் சும்மா வாய மூடிட்டு இருக்க அதனாலதான் நீங்க எல்லாம் இப்படி பண்றீங்க என சொல்ல ஒரு பொம்பள உன்னால என்ன பண்ண முடியும் என போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துடுவியா உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என சத்தம் போடுகிறார். கொஞ்சம் அங்க பாரு என சொல்ல போலீஸ் வந்து நிற்கிறது.

பிறகு அந்தப் பெண்மணியை கூப்பிட்டு விசாரிக்க உடனே இந்த குடிகாரன் நல்லவர் போல வேஷம் போட அவருடைய மனைவி இனிமேலும் கொடுமையை தாங்க முடியாது என அடித்து துன்புறுத்துகிறார் இவரை கைது பண்ணி கூட்டிட்டு போங்க என கூறுகிறார். இனிமேலாவது நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என சொல்கிறார். பிறகு போலீஸ் அந்த நபரை கைது செய்து கூட்டிச் செல்கிறது. இந்தப் பெண்ணை கண்ணம்மாவின் தோள் மீது சாய்ந்து கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 28.04.22
jothika lakshu

Recent Posts

Thadai Athai Udai Audio Launch

https://youtu.be/lewVy1-jb6E?t=2

4 hours ago

Kasivu Movie Press Meet | MS.Bhaskar | Kayal Patti Vijayalakshmi

https://youtu.be/SPNqvVR15cQ?t=1

4 hours ago

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…

5 hours ago

பிரபல இயக்குனரை மும்பையில் சந்தித்த சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…

5 hours ago

சொந்த குரலில் பாட்டு பாடி அசத்திய காமெடி நடிகர் யோகி பாபு.!!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…

5 hours ago