Baakiyalakshmi Serial Episode Update 28.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா சொன்னதால் கோபி வீட்டுக்கு வந்து பாக்கியாவிடம் உன்மேல எந்த தப்பும் இல்லை அப்படி இருக்கும்போது நீ எதுக்கு பிஸினஸை ஸ்டாப் பண்ணணும். நீ உன்னோட பிசினசை நடத்தி இனிமே நான் எதுவும் சொல்ல மாட்டேன். யோசிச்சுப் பார்த்தேன் நான் அப்படி சொன்னது தப்புதான் புரிஞ்சுகிட்டேன். உனக்கு எதுக்கு தேவையில்லாத சிரமம் என்று நினைத்து தான் சொன்னேன் என கூறுகிறார். நீ உன்னுடைய பிசினசை நடத்து என சொல்ல பாக்கியா இல்லைங்க என எதையோ சொல்ல வர கோபி அவரை நீ ஒன்னும் சொல்லாத என தடுத்து விடுகிறார்.
பிறகு கோபி கிளம்பிவிட ஜெனி இதுதான் நல்ல சந்தர்ப்பம் விட்டு விடாதீர்கள் என கூறுகிறார். ஈஸ்வரி கோபியே ஓகே சொல்லிட்டானே இனிமேல் உன்னுடைய பிசினசை நடத்து என கூறுகிறார். பிறகு இந்த விஷயத்தை எழிலிடம் சொல்ல அவரே வைத்து விளையாட பொம்மை என்று சொன்னா நிறுத்தனும் சொன்னா தொடங்கவும் எனக் கூறுகிறார்.
இந்தப் பக்கம் ராதிகா கோபியிடம் நீங்க டீச்சரோட ஹஸ்பண்ட்டை பார்த்தீங்களா பேசினீங்களா, என்ன சொன்னாரு? டீச்சரை பார்த்தீர்களா என அடுக்கடுக்காக கேள்வி கேட்கிறார். பிறகு ராதிகா பாக்யாவுக்கு போன் போட்டு எப்படி இருக்கீங்க என்ன ஆச்சு என கேட்க தன்னுடைய கணவர் பிசினசை நடத்த சொல்லிட்டாரு என்ற விஷயத்தை சொல்ல ராதிகா அதற்குக் காரணம் நான்தான் என்ன சொல்ல வர கோபி அதனை வேண்டாம் என்று தடுத்து விடுகிறார். பிரபு ராதிகா எதையோ பேசி சமாளித்து போனை வைத்து விடுகிறார். பிறகு ஏன் சொல்ல வேண்டாம்னு சொன்னீங்க என கேட்க எதுக்கு அதெல்லாம் சொல்ல வேண்டாம். உனக்குத் தேவை டீச்சர் பிசினசை நடக்கணும் அது நடந்துச்சு தானே அது போதும் எனக் கூறுகிறார்.
இந்த பக்கம் பாக்கியா மறுநாள் காலையில் வீட்டிற்கு உறவினர்கள் வருகிறார்கள் என விதவிதமாக சமைத்து வைத்திருக்கிறார். ஒரு மணி நேரத்தில் எக்கச்சக்கமான டிஷ் சமைத்து அசத்தி இருப்பதை பார்த்து பாராட்டுகிறார்.
பிறகு ஏழில் அமர்ந்த வீட்டில் அப்பா அம்மாவுடன் பேசி விட்டு வீட்டிற்கு கிளம்புகிறார். அமிர்தா ஒரு மாதிரியாக இருப்பதை பார்த்து என்ன ஏது என்று கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நன்றாக இருக்கிறேன் என கூறுகிறார். பிறகு எழில் ஜானு ஏதாவது சொன்னாளா என கேட்க அதெல்லம் ஒன்னும் சொல்லல என அமிர்தா கூறுகிறார். இந்த ஜென்மத்துல இன்னும் அமிர்தாவை தவிர வேறு எந்த பொண்ணையும் நினைச்சுக் கூட பார்க்க மாட்டேன் என எழில் கூறுகிறார். இதைக்கேட்டு அமிர்தா உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…