அப்பாவிற்கு திருமணம் செய்ய திட்டம் போடும் ஹேமா.. ஹேமாவை கரெக்ட் பண்ண நினைக்கும் வெண்பா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதி காலையில் பரபரப்பாக எழுந்து வேலைக்கு கிளம்புவதும் ஒரு ஆபரேஷன் ஆனா நான் நல்லா அசந்து தூங்கிட்டேன் இந்த வீட்டில் என்னை எழுப்பிவிட கூட ஆள் இல்லை என பாரதி புலம்பிக்கொண்டே கிளம்புகிறார். ஹேமா நீ இன்னைக்கு அகிலன் சித்தப்பாவோட ஸ்கூலுக்கு போயிட்டு என சொல்லிவிட்டு அவர் கிளம்பும் நேரத்தில் வீட்டில் வேலை பார்ப்பவர் வந்து ஐயா சாப்பிட்டுக்கொண்டிருந்த என சொல்ல இல்ல நேரம் ஆயிடுச்சு நான் வெளியே பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விடுகிறார். பிறகு அந்தப் பெண்மணி ஹேமாவிடம் இப்படி உங்க அப்பா வேலை வேலைன்னு இருக்காரு சரியா சாப்பிடுறது இல்லை தூங்குவது இல்லை என சொல்கிறார்.

பிறகு ஹேமா தன்னுடைய தோழிக்கு போன் செய்து உங்க அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி அவர் இப்ப எப்படி இருக்கிறார் என விசாரிக்கிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கா நானும் முதல்ல பயந்தேன் ஆனால் அப்பா இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்காரு எனக்கும் சந்தோஷமா இருக்கு என சொல்கிறார். பிறகு ஹேமா அப்போ நாமளும் அப்பாவுக்கு ஒரு கல்யாணம் பண்ண வேண்டியதுதான் இதைப்பற்றி அப்பா கிட்ட பேசணும் நல்ல அம்மாவைத் தேடிப் பிடிக்கணும் என முடிவு செய்கிறார்.

இந்த பக்கம் லட்சுமி ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த குமார் அண்ணா கடைக்காரர் உன்னைப் பற்றி தப்பாக பேசியதாக சொல்ல லட்சுமி கோபப்படுகிறார். அதன் பின்னர் லட்சுமி அப்பாவை பத்தி நான் பேசமாட்டேன் என்று சொன்னாலும் மத்தவங்க பேசுறாங்க. அம்மா, டாக்டர் அங்கிள் என யார்கிட்டயும் கேட்காம என் அப்பா யாருன்னு கண்டுபிடிக்கணும் என முடிவு செய்கிறார் லட்சுமி.

இந்த பக்கம் ஸ்கூலுக்கு போவதற்கு முன்னதாக அப்பாவைப் பார்த்து கல்யாணம் பற்றி பேச வேண்டும் என ஹேமா ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். அங்கு போய் பாரதியை பார்த்த உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் என்று சொல்ல ஏதாவது வேணுமா என்ன வேணும் டிரஸ்ஸா? சாக்லேட் டா என்ன வேணும் என பாரதி கேட்க புது அம்மா வேண்டும் என சொல்கிறார். ஹேமா பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக வெண்பா வந்து இதை ஓட்டு கேட்கிறார். ஹேமா இப்படி சொல்வதை கேட்டு வெண்பா மகிழ்ச்சி அடைகிறார்.

நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குங்க டாடி என ஹேமா கூறுகிறார். பாரதி இதைக் கேட்டு உனக்கு திடீர்னு யார் இப்படி பேச கற்றுக் கொடுத்தது என பாரதி கேட்கிறார். என் ஃப்ரெண்டோட அப்பாவும் இப்படித்தான் தனியா இருந்தாங்க. இப்போ அவர்களை ஒரு கல்யாணம் பண்ணி வைக்க அவர் ரொம்ப சந்தோஷமா இருக்கார், வீட்ல என்ன பார்த்துக்க எல்லாரும் இருக்காங்க. சித்தப்பாவை பாத்துக்க சித்தி, தாத்தாவைப் பார்த்து பாட்டினு எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க நீங்களும் ஒரு கல்யாணம் பண்ணிக்கங்க என சொல்கிறார்.

பாரதி கல்யாணம் எல்லாம் சாதாரண விஷயமல்ல தாத்தா பாட்டி என்ன திட்டினாலும் அந்த அளவுக்கு அவளுக்கு என் மேல பாசம் இருக்கு அவங்கள இனி என்ன திட்ட வேணாம்னு சொல்லி விடுவேன் என கூறுகிறார். நீங்க நான் சின்ன பொண்ணு நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் லவ் இருந்தா யாரும் திட்ட மாட்டாங்க என கூறுகிறார். உடனே வெண்பா சாப்பாடு ஆர்டர் பண்ணி எடுத்து வந்து பாரதியிடம் கொடுத்து அவரை சாப்பிட வைக்கிறார். பாரதி மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வது பல நடிக்கிறார். இதையெல்லாம் பார்த்த ஹேமா சந்தோஷப்படுகிறார். வெண்பா ஆண்ட்டிக்கு அப்பா மேல இவ்வளவு பாசமா என யோசிக்கிறார்.

பிறகு பாரதி உனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சி நீ கிளம்பு என வெண்பாவை அனுப்பி வைக்கிறார். வெண்பா பாரதியின் கல்யாணம் பண்ணனும்னா முதலில் ஹேமாவை கரெக்ட் பண்ணனும் பண்ணிடுவோம் என திட்டம் போடுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது

Bharathi Kannamma Serial Episode Update 28.02.22
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

8 hours ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

11 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

11 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

14 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

14 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

14 hours ago