பாரதியை கடுப்பேத்திய வெண்பா.. கண்ணம்மாவிடம் அப்பாவை கல்யாணம் செய்ய சொல்லும் ஹேமா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சௌந்தர்யா ஹேமாவை ஸ்கூலுக்கு கூட்டி வர அப்போது லக்ஷ்மியிடம் பேசு அவ உனக்கு அக்கா மாதிரி என சௌந்தர்யா சொல்லிக் கொடுக்கிறார். நான் இன்னைக்கு கண்டிப்பா பேசுவேன் என சொல்கிறார் ஹேமா. சரி நீ இங்கேயே இரு நான் உன் பிரின்சிபலை பார்த்துட்டு வரேன் என உள்ளே செல்கிறார் சௌந்தர்யா.

இந்த நேரத்தில் ஒரு குழந்தை அவருடைய அக்காவுடன் வந்து இவதான் என்ன மிஸ் கிட்ட போட்டு கொடுத்தார் என சொல்ல என் தங்கச்சியை ஏண்டி போட்டு கொடுத்த என கேட்கிறார். எல்லார்கிட்டயும் இருந்து பென்சிலை திருடினா அதனாலதான் போட்டுக் கொடுத்தேன் என சொல்ல அந்த மாணவி ஹேமாவை அடிக்க வர லட்சுமி கையை பிடித்து கீழே தள்ளி விடுகிறார். அவன் மேல கைய வச்சா நான் சும்மா இருக்க மாட்டேன் என கூறுகிறார்.

பிறகு லட்சுமி ஹேமாவிடம் நீ எனக்கு தங்கச்சி மாதிரி என கூறுகிறார். என் பாட்டியும் இதையே தான் சொன்னாங்க என சொல்ல இந்த நேரத்தில் சௌந்தர்யாவும் வந்து வடுகிறார். எங்கள பார்த்தா அக்கா தங்கச்சி மாதிரி தெரியுதா என தோள் மேல் கை போட்டு நிற்கின்றனர். மேலும் உங்களைப் பார்த்தா எனக்கு என் பாட்டியை பார்க்கிற மாதிரி இருக்கு என லட்சுமி சொல்வதைக் கேட்டு எப்படி கரெக்டா சொல்கிறார் என மனதுக்குள் நினைத்து சந்தோஷப்படுகிறார் சௌந்தர்யா.

இந்தப் பக்கம் பாரதி ஆஸ்பிட்டலுக்கு வந்த வெண்பா லட்சுமியிடம் பேசி வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு அவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த விஷயங்களை சொல்லி பாரதியை கடுப்பாகிறார். விவாகரத்து கேஸ் சீக்கிரம் வரப்போகுது என்ன முடிவெடுத்து இருக்க என கேட்டு டென்ஷன் பண்ண என்னை மூடு பண்ணவே வருவியா என திட்டி விட்டு உள்ளே சென்று விடுகிறார் பாரதி.

இந்த பக்கம் லட்சுமி ஹேமா வெளியே போயிருந்த நேரத்தில் ஹேமாவின் நோட்டில் பாரதியின் போட்டோவை பார்த்து தன்னுடைய ஏக்கங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரே வீட்ல ஒண்ண எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா இருக்கு. எனக்கு இதுவரை கிடைக்காத அப்பா பாசம் மொத்தமாய் கெடச்சா ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என சொல்கிறார்.

பிறகு இருவரும் சாப்பிட வெளியே வர கண்ணம்மா காத்துக்கொண்டிருக்கிறார். சாப்பிடாம அந்த நேரத்தில் லட்சுமி பிரின்ஸ்பல் கூப்பிடுவதாக மிஸ் ஒருவர் வந்து சொல்ல லட்சுமி பார்த்துவிட்டு வருகிறேன் என செல்கிறார். இந்த நேரத்தில் கண் அம்மாவிடம் பாரதியை கல்யாணம் பண்ணி செல்வது பற்றிய விஷயத்தை பேசத் தொடங்குகிறார் ஹேமா.

இனிமே லட்சுமியோட அப்பா வரவே மாட்டார் என்று இந்த டாடி சொன்னாரு அது உண்மையா என கேட்க அப்படியே வச்சுக்க என கண்ணம்மா சொல்கிறார். டாடி ரொம்ப பாவம் அவரு வீட்ல பாத்துக்க யாரும் இல்ல. பாட்டி தாத்தா சித்தப்பா சித்தி என எல்லோரும் இருந்தும் அவங்க எல்லாரும் டாடி கூட சண்டைதான் போடுறாங்க. எனக்கு அம்மா இல்ல லட்சுமிக்கும் அப்பா இல்ல, நீங்க ஏன் டாடியை கல்யாணம் பண்ணிக்கறீங்களா என எனக் கேட்க கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 25.03.22
jothika lakshu

Recent Posts

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

36 minutes ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

40 minutes ago

வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

44 minutes ago

மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்..இதோ உங்களுக்காக..!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…

1 hour ago

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

Nee Forever – Official Trailer

https://youtu.be/Z-GvjDHlboE?si=gvivktj3desLdtBx

2 hours ago