விக்ரம் ஹாஸ்பிடல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட வெண்பா மற்றும் அம்மா.. ஷர்மிலாவிற்கு சௌந்தர்யா கொடுத்த ஷாக்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா வேலை செய்து கொண்டு இருக்க அப்போது வந்த சௌந்தர்யா வேலையெல்லாம் எப்படி இருக்கு என்ன ஏது என விசாரிக்கிறார். பிறகு கண்ணம்மா உங்க பையன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து இருப்பாரே. அவை எப்படி இங்க வேலைக்கு வந்த என கேட்டிருப்பார் இதெல்லாம் நீங்க எல்லாரும் சேர்ந்து திட்டம் போட்டு பண்ண வேலை என்ன சொல்லியிருப்பார் என கூறுகிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல கண்ணம்மா எப்படி இங்க வந்தா? மெடிக்கல் சம்பந்தமான அறிவு இல்லாம எப்படி வேலை கிடைச்சது என கேட்டான். விக்ரம் இன்டர்வியூ பண்ணி தேர்ந்தெடுத்து இருப்பான் என சொன்னோம் என கூறுகிறார். உங்க பையனுக்காக இப்படி பேசாதீங்க நடந்தது எல்லாத்தையும் நான் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் என கண்ணம்மா சொல்கிறார்.

பிறகு சௌந்தர்யா, வேணு, பாரதி மற்றும் விக்ரம் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும் போது வெண்பா தனது அம்மாவுடன் காரில் வந்து இறங்குகிறார். அப்போது அவரிடம் அவர்தான் விக்ரம். ஹாஸ்பிடல் உரிமையாளர் என சொல்கிறார். மேலும் இவர்கள் பாரதியோட அப்பா அம்மா என கூறுகிறார். ஷர்மிளா மிஸ்டர் விக்ரம் என அழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சௌந்தர்யா யார் இது வெண்பா கூட புது ஆளா இருக்கு என குழம்புகிறார். பாரதி இவர்களை நான் தான் அழைத்தேன். இது வெண்பா என்னோட ஃப்ரெண்ட் டாக்டர் இருக்காங்க இது அவங்களோட அம்மா என அறிமுகப் படுத்துகிறார் பாரதி.

பிறகு சௌந்தர்யா இப்பதான் டாக்டர் ப்ராக்டிஸ் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்களே என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார். பிறகு பாரதி இவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று சாப்பிட வைக்கிறார். கண்ணம்மாவை கூப்பிட்டு இவர்களுக்கு வேண்டியதை பரிமாறு என சொல்கிறார்.

கண்ணம்மா என்ன சாப்பிடறீங்க எனக் கேட்க ஷர்மிளா டிபன் என சொல்கிறார். வெண்பாவை கேட்க அவர் பிரியாணி இது அது என அடுக்கிக் கொண்டே செல்ல இரண்டு சப்பாத்தி போதும் என ஷர்மிலா சொல்கிறார். பிறகு இவர்களுக்கு இட்லி மற்றும் சப்பாத்தி கொடுத்து இட்லி எப்படி இருக்கு என கேட்க ஷர்மிளா நன்றாக இருக்கிறது என சொல்கிறார். அன்னைக்கு கொட்டுச்சே அதே மாவுதான் என சொல்கிறார். பிறகு கண்ணம்மா அங்கிருந்து கிளம்பியதும் ஷர்மிளா இவர்தான் அந்த மாவு காரி, இவர் இங்கே என்ன பண்றா என கேட்க வெண்பா விடுமா ஏதாவது கேட்டரிங் ஆர்டர் எடுத்து இருப்பா எனச் சொல்கிறார். மேலும் ஷர்மிளா பாரதியிடம் கல்யாணப் பேச்சை எடுக்க அவர் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

பிறகு ஷர்மிளா சௌந்தர்யாவை சந்தித்து வெண்பாவிற்கு கல்யாணம் பண்ணா தான் இந்தியா வந்ததாக கூறுகிறார். ரொம்ப நல்ல விஷயம் நல்ல பையனா பார்த்து வெண்பாவுக்கு கல்யாணம் பண்ணி வையுங்க. படிச்ச மாப்பிள்ளையா கண்டிப்பா கிடைப்பாங்க, ஏற்கனவே கல்யாணமான பையன் விவாகரத்தான பையன் எல்லாம் வேண்டாம், அதற்கெல்லாம் என்ன அவசியம்? இப்போவாவது உங்களுக்கு அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு தோணுச்சே அதுவரைக்கும் சந்தோஷம். நல்ல மாப்பிள்ளை கிடைச்சு கல்யாணம் ஆகி குழந்தை குட்டியோடு சந்தோஷமாக வாழ என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என கூறுகிறார். சௌந்தர்யா பேசுவதைக் கேட்ட ஷர்மிளா எல்லோருடைய மனதில் என்ன இருக்கிறது என எனக்கு நன்றாகவே புரிகிறது இந்த வெண்பா தான் அடுத்து வருஷத்தை வேஸ்ட் செய்து விட்டாள் என நினைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது

Bharathi Kannamma Serial Episode Update 20.04.22
jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

2 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

2 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

2 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

2 days ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

2 days ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

2 days ago