bharathi kannamma serial episode update 17-08-22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதிக்கு லட்சுமி போன் போட்டு அப்பா தயவு செய்து ஹேமாவை ஸ்கூலுக்கு அனுப்புங்க. அவ இல்லாம என்னால ஸ்கூலுக்கு போக முடியல படிக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு அவ என் கூட இருந்தா நீங்களே என் கூட இருக்க மாதிரி இருக்கும். நான் அவகிட்ட உண்மையை சொல்லிட்டு வேணா நீங்க அவளை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டீங்க சத்தியமா நான் உண்மையிலே சொல்ல மாட்டேன் அம்மா மேல, உங்க மேல, என் மேல எல்லார் மேலயும் ப்ராமிஸ் என கூறுகிறார். பாரதி நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன் போன் வச்சுடு என போனை கட் செய்து விடுகிறார்.
சரியாக இந்த நேரத்தில் கண்ணம்மா பைல் ஒன்றோடு ரூமுக்குள் வர அவரை பிடித்து திட்டுகிறார். லட்சுமி தூண்டிவிட்டு இப்படி எல்லாம் பேச வைக்க உனக்கு அசிங்கமா இல்லையா என கேட்க நான் எதையும் பேச சொல்லல அவளை அவ மனசுல இருக்குறத பேசி இருக்கா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? பெரிய உங்க பிரச்சனைக்குள்ள குழந்தைங்கள பிரிக்க முயற்சி பண்ணாதீங்க. ஹேமாவை ஸ்கூலுக்கு அனுப்புங்க என சொல்ல நான் குழந்தைகளை கூட நம்புவேன் உன்னை நம்ப மாட்டேன். நீ எப்படியாவது ஹேமாவோட மனச கலைக்க பார்த்த நான் எடுத்த முடிவுல உறுதியாக இருக்கேன். ஹேமாவை ஸ்கூலுக்கு அனுப்ப போவதில்லை என கூறுகிறார்.
இந்தப் பக்கம் வெண்பா நிச்சயதார்த்தத்திற்கு தயாராகாமல் இருக்க ஷர்மிளா அவரை பியூட்டி பார்லருக்கு கிளம்பி போக சொல்ல அப்போது வந்த ஷர்மிளா எதுக்கு அலைஞ்சிட்டு நானே ஒரு பியூட்டிஷியனை ஹோட்டலுக்கு வர சொல்லி இருக்கேன் என கூறுகிறார். வெண்பா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்.
இந்த பக்கம் மருத்துவமனைக்கு சென்ற வேணுவிடம் டாக்டர் உங்க இறப்பைல புண் ஏற்பட்டு இருக்கு. அத நீங்க கவனிக்காமல் விட்டதால் அது அதிகமாகி இப்போ வயிற்றுப் புற்றுநோயா மாறி இருக்கு என சொல்கிறார். இதைக் கேட்ட வேணும் அதிர்ச்சடையில் இன்னும் எத்தனை வருடம் நான் உயிரோட இருப்பேன் என கேட்க வருஷம் எல்லாம் சொல்ல முடியாது சில மாதங்கள் தான் என டாக்டர் கூறுகிறார். சரி தயவு செய்து இந்த விஷயத்தை வீட்டில் யாரிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் வேணு.
அடுத்ததாக ரூமில் ரோகித் தன்னுடைய நண்பரிடம் நிச்சயம் குறித்து பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ஷர்மிளா வந்து விட உடனே பிசினஸ் விஷயமாக பேசுவது போல நடிக்கிறார். சீக்கிரம் ரெடி ஆகுங்க மாப்பிள்ளை என சொல்லி ஷர்மிளா வெளியே கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…