சமையல் அம்மா பிறந்தநாள் பங்ஷனுக்கு போறோம்.. பாரதியிடம் கண்டிஷன் போட்ட ஹேமா.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஸ்கூலில் ஹேமாவுக்கு கண்ணம்மா சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்கும் போது அவர் தன்னுடைய தோழி சொன்னதையே நினைத்துக் கொண்டிருக்கிறார். பிறகு கண்ணம்மா என்ன யோசிச்சுட்டு இருக்க என கேட்க எங்க அப்பாவை பார்த்து இருக்க யாருமே இல்ல அவ ரொம்ப கஷ்டப்படுறார். நீங்க லட்சுமியோட அப்பாவோட இருந்தபோது அவரை எப்படி பார்த்து போங்க நல்லா பார்த்து இருக்கிங்களா என கேட்க கண்ணம்மா அவருக்கு பிடித்தது எல்லாம் செய்து தருவேன். மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் அதைவிட மீன் வறுவல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என கூறுகிறார்.

பிறகு தாத்தாவை பார்த்துக்க பாட்டி சித்தப்பாவை பாத்துக்க சித்தி இருக்குற மாதிரி எங்க அப்பாவை பார்த்தேன் யாரும் இல்லை என சொல்லி வருத்தப்படுகிறார். பெரியவிளை விஷயத்தை பெரியவங்க பார்த்துப்பாங்க நீ இதுவெல்லாம் யோசிக்காத என கண்ணம்மா சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார்.

வீட்டில் பாரதி ஹைதராபாத் செல்லும் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என யோசித்துக் கொண்டிருக்கிறார் சௌந்தர்யா. அப்போது அங்கு வந்த கணவர் ஹேமாவை வைத்து பேச வைக்கலாம் என திட்டம் போடுகிறார். அதற்கேற்றாற்போல ஹேமாவும் அங்கு வர அவரிடம் சமையல் அம்மா எவ்வளவு ஆசையா உன்ன பிறந்தநாள் விழாவிற்கு கூப்பிட்டாங்க நீ ஹைதராபாத் போய்ட்டா அவங்களோட பிறந்தநாள் விழாவை எப்படி பார்ப்ப என கூறுகிறார். ஹைதராபாத்துக்கு இன்னொரு நாள் கூட வைக்கலாம் ஆனால் சமையல் அம்மாவோட பிறந்தநாள் இதோட அடுத்த வருஷம் தான் வரும் என அவருடைய மனதை மாற்றி பாரதியிடம் பேச சம்மதிக்க வைக்கின்றனர்.

இந்த பக்கம் லட்சுமி அப்பா வருவதற்குள் இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கிறது என விரல் விட்டு எண்ணி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கண்ணம்மா தன்னுடைய கதையை சொல்ல அப்போ நீ அப்பா வர மாட்டாங்கன்னு சொல்றியா என்னை ஏமாற்றப் பார்க்கிறாய் என கோபப்படுகிறார் லட்சுமி. அவரை ஒருவழியாக சமாதானம் செய்கிறார் கண்ணம்மா.

இந்த பக்கம் பாரதி ஹைதராபாத் கிளம்ப துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க ஹேமா சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். உன்னோட துணியெல்லாம் எடுத்துட்டு வா எனச்சொல்ல ஹைதராபாத் போயே ஆகணுமா என கேட்கிறார் ஹேமா. ஏன் என்னாச்சு என பாரதி கேட்க சமையல் அம்மாவோட பிறந்தநாள் பங்ஷனுக்கு போயிட்டு அப்புறம் போகலாம். லட்சுமி எவ்வளவு ஆசையா கூப்பிட்டா உங்களையும் தானே கூப்பிட்டா என கூறுகிறார். முக்கியமான வேலை போய்த்தான் ஆகணும் டிக்கெட்டை கேன்சல் பண்ண முடியாது என பாரதி சொல்ல எனக்கு லட்சுமியோட அப்பாவுக்கு பார்க்கனும்னு ஆசையா இருக்கு அதனால நீங்க டிக்கெட்டை கேன்சல் பண்ணி விடுங்க என சொல்கிறார்.

யாராச்சும் சொல்லிக் கொடுத்து படிக்க சரியா என கேட்க இல்ல நானா தான் பேசுகிறேன் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு நாம சமையல் அம்மாவோட பிறந்தநாள் பங்ஷனுக்கு போறோம் போறோம் என சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி விடுகிறார் ஹேமா. இதனால் அதிர்ச்சியான பாரதி என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகின்றது.

Bharathi Kannamma Serial Episode Update 17.02.22
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago