bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி வீட்டுக்கு வர அவரை அழைத்து வைத்து பேசுகிறார் சௌந்தர்யா. அப்போது அவரிடம் நாளைக்கு ஒரு முக்கியமான பங்சனுக்கு போகணும், நீ கண்டிப்பாக வரவும் என கூறுகிறார். என்ன பங்க்ஷன் எனக் கேட்க வெண்பா கூட திருமண பங்ஷன் என கூறுகிறார். அவங்க அம்மா ஷர்மிளாவை எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும் இப்போ சிஸ்டர்ஸ் மாதிரி பழகுறோம் என கூறுகிறார். வெண்பாவிற்கு வேற ஒருத்தரோட கல்யாணம் நடந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் என சௌந்தர்யா சொல்கிறார்.
பிறகு ரோகித் ஷர்மாவிடம் கண்ணம்மா பற்றி பேச அவருடைய போன் நம்பரை வாங்கி விழாவுக்கு அழைக்கிறார். கண்ணம்மாவும் கண்டிப்பாக வருவதாக வாக்குக் கொடுக்கிறார். பிறகு வெண்பா வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வர அவரிடம் ஷர்மிளா நாளைக்கு நம்ம வீட்டுல ஒரு பெரிய ஃபங்ஷன் இருக்கு என கேட்க வெண்பா என்ன விஷயம் என்று ஆர்வத்தோடு கேட்க உன்னுடைய திருமணம் தொடர்பான பங்க்ஷன் என்ன சொல்கிறார். ஆனால் அது எந்த மாதிரியான பங்க்ஷன் என என்னால் சொல்ல முடியாது அது சஸ்பென்ஸ் என கூறி விடுகிறார்.
இந்த பக்கம் பாரதி ஹேமாவிடம் ( தூங்கி கொண்டிருக்கும்போது ) நீ கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை அதனால் தான் உன்னை பார்க்க முடியவில்லை என பேசுகிறார். பிறகு ஸ்கூலில் ஹேமா டாடி ரெண்டு மூணு நாளா என்ன பார்க்கவே இல்ல அவரிடம் விவாகரத்து விஷயம் பற்றி கேட்டதிலிருந்து என்னிடம் பேசுவதில்லை என லட்சுமியிடம் சொல்லி அழுகிறார்.
மேலும் யாரும் இந்த விஷயம் குறித்து எதுவும் சொல்ல மாட்டாங்க எங்க அம்மா உயிரோடு தான் இருக்காங்க போல. ஏதோ என் கிட்ட பெருசா மறைக்கிறார்கள், இத கண்டிப்பா கண்டுபிடிக்க வேண்டும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…