bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹேமா லட்சுமி என இருவரும் ஓடி வந்து சௌந்தர்யாவிடம் டாடி எப்படி இருக்காரு என கேட்க சௌந்தர்யா கண்கலங்கி அழுகிறார்.
பிறகு எல்லோரும் பாரதியை பார்க்க உள்ளே சென்று ஹேமா லட்சுமி என இருவரும் பாரதி டாடி எழுந்திருங்க என சொல்லி எழுப்ப முயற்சி செய்ய பாரதி கண் விழிக்காமல் இருக்கிறார். பிறகு இருவரும் கோவில் பிரசாதத்தை நெற்றியில் வைத்து விடுகின்றனர். சௌந்தர்யா கண்ணம்மாவையும் விபூதி வைக்க சொல்ல கண்ணம்மா மறுப்பு தெரிவித்து விடுகிறார்.
டாக்டரிடம் பாரதியின் நிலை குறித்து கேட்க இன்னும் அவர் அபாய கட்டத்தில் தான் இருக்கிறார் எங்களால் முடிந்த பெஸ்ட் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கும் நியூராலஜி டாக்டரை தான் வர வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என சொல்ல சௌந்தர்யா எங்களுக்கு தெரிந்த ஒரு நியூராலஜி டாக்டர் இருக்கார், அவரை வரவைக்கிறோம் என சொல்கிறார்.
பிறகு கண்ணம்மா குழந்தைகளை கூட்டிக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பிய பிறகு தனியாக ஒரே இடத்தில் கண்ணம்மா அமர்ந்து கண்கலங்க தாமரை அங்கு வந்து பாரதி மேல உனக்கு இன்னமும் காதல் இருக்கு புருஷனுக்கு ஒன்று என்றால் உன் உடம்பு துடிக்குது என சொல்ல கண்ணம்மா அப்படியெல்லாம் எதுவும் கிடையாது இருந்தாலும் அவருடைய நிலைமையை நினைத்து வருத்தமா இருக்கு என சொல்கிறார்.
மறுநாள் காலையில் நியூராலஜி டாக்டர் வந்து பாரதியை பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போது கண் விழிக்க அவர் பாரதி உங்களுக்கு என்னை யாருன்னு தெரியுதா நான் உங்களோட ஒர்க் பண்ணி இருக்கேன் என சொல்ல பாரதி தெரியலை என கூறுகிறார். பிறகு குடும்பத்தாரை உள்ளே அழைத்து இவர்கள் யார் என்று தெரிகிறதா என கேட்க பாரதி யாருன்னு தெரியல என சொல்லிவிட சௌந்தர்யா என் பையனுக்கு என்ன ஆச்சு என அழுது துடிக்கிறார். டாக்டர் எல்லோரையும் வெளியே இருக்க சொல்கிறார்.
வெளியே வந்த சௌந்தர்யா பாரதிக்கு என்ன ஆச்சு நம்ப யாரையுமே தெரியலன்னு சொல்றானே என்னை அழுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,…