விழுப்புரம் டாக்டர் சொன்ன வார்த்தை.. கண்ணம்மாவை வெறுப்பேற்றிய கணேசன் .. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா தன்னுடைய குழுவுடன் விழுப்புரம் மருத்துவமனைக்கு வந்து சேர்கிறார். பிறகு டாக்டர் ஜார்ஜ் அவர்களை சந்தித்து ஆப்பரேஷனுக்கு எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறதா என விசாரிக்கிறார். பிறகு இதயத்தை எப்படி சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்தில் கொண்டு போகப் போறீங்க என கேட்க கணேசன் ஷாம்பர் மூலமாக கொண்டு செல்ல இருப்பதாக கூறுகிறார். பிறகு டாக்டர் ஜார்ஜ் பாரதியின் போன் நம்பரை கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

அதன்பிறகு கணேசன் நைட்டு பன்னெண்டு மணி நேரத்துல ஒரே வெக்கையாக இருக்கிறது. பக்காவா ப்ளான் போட்டு பல பேரிடம் பேசி சாம்பர் மூலமாக சீக்கிரமாக இதயத்தை சென்னைக்கு கொண்டு போக திட்டம் போட்டேன். ஆனால் சிலர் மழை வரும் மண்ணாங்கட்டி வரும்னு என் திட்டத்தை கெடுக்க பார்த்தாங்க. அவங்களுக்கு அவங்க சொல்ற மாதிரி தான் நடக்கணும்னு ஆசை. அப்புறம் எதற்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆளுங்க எல்லாம் இருக்கோம் என கூறுகிறார். கண்ணம்மா தன்னை பற்றி இப்படிப் பேசுவதால் உடனே நானும் எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் இதயத்தை சென்னைக்கு கொண்டு போகணும்னு தான் ஆசைப்படுறேன் என கூறுகிறார்.

நாளைக்கு காலையில முந்திரிக்கொட்டை காட்டும் முன்னாடி போய் சாம்பார்ல ஏறி உக்காந்துகாதிங்க. உனக்கு பேருக்கு மட்டும் தான் அனுமதி. சாம்பர் மேலே பறக்கிறது பொறுமையா வேடிக்கை பார்த்துட்டு பஸ் ஏறி சென்னை வந்து சேருங்க என கூறுகிறார். இப்ப போய் தூங்கி ரெஸ்ட் எடுங்க. இங்கேயும் போய் பேஷண்ட் கிட்ட தொடர்ந்து பேசிட்டே இருக்காதீங்க என கூறுகிறார்.

பின்னர் கண்ணம்மா ஆயிஷாவின் அப்பா அம்மாவை பார்த்து பேசி அவர்களுக்கு சமாதானம் கூறுகிறார். மேலும் இந்த முடிவு எடுத்த அவர்களுக்கு நன்றி சொல்கிறார். பின்னர் டாக்டர் ஜார்ஜ் பாரதிக்கு போன் செய்து உங்களை மாதிரி நானும் நிறைய இதய அறுவைச் சிகிச்சைகளை செய்து உள்ளேன். ஆனால் இந்த ஆபரேஷன் விஷயத்தில் எனக்கு பயமாக இருக்கிறது உங்களுடைய உதவி எனக்கு தேவை என கேட்கிறார். என்ன விஷயம் என பாரதி சொல்ல இந்த ஆபரேஷன் போது நீங்கள் என்னுடன் இருந்து என்னை லீட் செய்தால் நன்றாக இருக்கும் என கூறுகிறார்.

விழுப்புரம் சென்று அங்கு ஆபரேஷன் செய்து இதயத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு வந்து மீண்டும் சக்திக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பதால் பாரதி இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என யோசிக்க ஜார்ஜ் வேண்டுகோள் வைக்க பாரதி சரி நான் காலையில் விழுப்புரத்தில் இருப்பேன் என கூறுகிறார்.

மறுநாள் காலையில் ஊரெல்லாம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க மருத்துவமனையில் கண்ணம்மா கடவுளிடம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இதயத்தைத் சென்னைக்கு கொண்டு சென்று சக்தியை காப்பாற்ற வேண்டும் என வேண்டுகிறார். பின்னர் கணேசன் பாரதிக்காக காத்துக் கொண்டிருப்பதை பார்த்து யாரையோ எதிர்பார்த்து காத்திருக்கிறேன் யார் வரா என கேட்க அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு என முகத்தைக் காட்டுகிறார்.

பிறகு பாரதி வந்து நிற்க நீங்க என்ன டாக்டர் இங்க இருக்கீங்க என கண்ணம்மா கேட்க பிறகு கணேசன் ஜார்ஜ் போன் செய்து பாரதியை உதவிக்கு அழைத்ததாக கூறுகிறார். ஆபரேஷனின் போது நீங்க கூட இருந்தால் நன்றாக இருக்கும் நானும் யோசித்தேன். ஆனால் இரண்டு இடத்திலும் நீங்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பதால் இதைப் பற்றி நான் சொல்லவில்லை என கண்ணம்மா சொல்ல எது நடந்தாலும் அது என்னால தான் நடந்தது என சொல்லி பெருமைப்பட்டுக்கணும்னு இவங்களுக்கு அல்ப ஆசை என கணேசன் கண்ணம்மாவை சீண்டுகிறார்.

பிறகு பாரதியை பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க அவர்களிடம் இதயத்தை எப்படி சென்னைக்கு கொண்டு செல்லப் போகிறோம் என்ற விஷயத்தை சொல்லிவிட்டு ஆபரேஷன் செய்வதற்காக உள்ளே செல்கிறார். உள்ளே சென்ற பாரதி சக்தி தன்னிடம் தைரியமாக ஆப்பரேஷன் பண்ணுங்க நான் பயப்பட மாட்டேன் நீங்க பயப்படாம ஆபரேஷன் பண்ணுங்க என சொன்ன விஷயத்தை நினைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 12.05.22
jothika lakshu

Recent Posts

நூறு சாமி திரை விமர்சனம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…

7 hours ago

சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்பட விமர்சனம்

கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…

7 hours ago

குழந்தை பிறப்பை முன்கூட்டியே திட்டமிட்ட சமந்தா… வைரலாகும் பழைய பேட்டி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…

7 hours ago

‘தலைவர் 173’ படப்பிடிப்பு தொடக்கம்… அஸ்வத் மாரிமுத்துவுடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…

7 hours ago

‘கருப்பு’ படத்திற்கு விஜய் தான் முதல் காரணம்… சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஆர்ஜே பாலாஜி!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…

8 hours ago

மீண்டும் இணையும் ‘பிரேமம்’ கூட்டணி… நிவின் பாலியின் 50வது படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்!

2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…

8 hours ago