சக்தி பாரதியிடம் சொன்ன வார்த்தை.. பதற்றத்தில் உள்ள பாரதிக்கு சௌந்தர்யா கொடுத்த பதில்.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா வீட்டுக்கு வர லட்சுமி பிரபா பற்றி பேசிக்கொண்டிருக்க போதும் நான் இன்னைக்கு நைட்டு அந்த ஆபரேஷன் விஷயமா விழுப்புரம் போகிறேன். நீ ஹேமா வீட்டுக்கு போய் தங்கிக்க. நான் குமார் அண்ணா கிட்ட சொல்லி இருக்கேன் என சொல்ல லட்சுமி இதைக்கேட்டு சந்தோஷப்படுகிறார்.

பிறகு மருத்துவமனையில் பாரதி குழுவுடன் ஆபரேஷன் பற்றி பேசிக்கொண்டிருக்க அப்போது சக்தியின் பெற்றோர் வந்து ஆபரேஷன் நல்லபடியாக நடந்து என் பொண்ணு உயிர் பிழைத்து வந்து விடுவாளா? எதுவும் பிரச்சனை இல்லை தானே என கேட்கிறார். அவர்கள் கண் கலங்கும் பாரதி அவர்களுக்கு ஆறுதல் சொல்லி தைரியமாக இருங்க. நீங்க தைரியமாக இருந்தால்தான் சக்திக்கு தைரியம் சொல்ல முடியும். அவளுடைய உடம்பில் இப்போது தைரியம் ரொம்ப முக்கியம் என சொல்ல இந்த நேரத்தில் டாக்டர் அங்கிள் என சக்தி குரல் கொடுக்கிறார்.

பிறகு சக்தி எனக்கு நாளைக்கு ஆபரேஷன் நடக்கப் போகுது. இருதய மாற்று அறுவைச் சிகிச்சை நீங்க தான் செய்யப் போறீங்க என்று நான் செய்தியில் பார்த்தேன் என சொல்ல பாரதி நீ தைரியமா இருக்கணும் என கூறுகிறார். நான் பயப்படமாட்டேன் என்னுடைய நல்லதுக்கு தானே இந்த ஆபரேஷன் நடக்கிறது. எனக்காக இவ்வளவு பேர் கஷ்டப்படும் போது நான் மட்டும் எப்படி பயப்படுவேன். தைரியமா இருப்பேன் நீங்க பயப்படாம நல்லபடியா ஆப்பரேஷன் பண்ணுங்க என சொல்கிறார். பாரதி சக்தி தைரியமான பேச்சுக்கு தேங்க்ஸ் சொல்ல அத கண்ணம்மா ஆன்ட்டிக்கு சொல்லுங்க, அவங்க தான் எனக்கு தைரியம் சொன்னாங்க என கூறுகிறார். தைரியமா இருக்கிறேனா என கண்ணம்மாவிடம் சக்தி கேட்க கண்ணம்மா ஆப்பரேஷன் முடிகிற வரைக்கும் இப்படித்தான் இருக்கணும் என சொல்லி குழந்தையை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். பிறகு கண்ணம்மா குழுவுடன் விழுப்புரத்திற்கு கிளம்புகிறார்.

பிறகு லட்சுமி ஹேமா வீட்டிற்கு வர எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் பாரதி வீட்டிற்கு வர லட்சுமி, ஹேமா என இருவரும் அவருக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். ‌‌ பிறகு இருவரையும் விளையாட அனுப்பி வைத்துவிட்டு சௌந்தர்யா பாரதி உட்கார சொல்லி ஏன் பதற்றமாக இருக்கிற என்று கேட்கிறார். இது ஆப்பரேஷன் சாதாரண விஷயம் கிடையாது இது வரைக்கும் எவ்வளவு ஆபரேஷன் பண்ணி இருந்தாலும் இது ரொம்ப கவனமாக பண்ணவேண்டிய ஆப்பரேஷன். பல பேரோட கூட்டு முயற்சி என கூறுகிறார். எல்லாருடைய முயற்சியையும் வெற்றியடையச் செய்வது என்னுடைய கையில் தான் இருக்கிறது அதனால் பதற்றமாக இருக்கிறது என கூறுகிறார்.

பிறகு சௌந்தர்யா உனக்கு ஒரு கதை சொல்கிறேன் என மகாபாரதத்திலிருந்து அர்ச்சுனன் தூரத்தில் இருக்கும் மலையின் ஓரத்தில் ஒரு மரத்தின் ஒரு கிளையில் இருக்கும் பறவையை கரெக்டாக குறிவைத்து அடித்த விஷயத்தை பற்றி கூறுகிறார். பாரதியின் அப்பாவும் பாரதிக்கு தைரியம் சொல்ல பிறகு பாரதி ஒரு அளவிற்கு ரிலாக்ஸ் ஆகிறார். பிறகு பாரதி தன்னுடைய அம்மா அப்பாவுக்கு நன்றி சொல்லி விட்டு ரூமிற்கு செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 11.05.22
jothika lakshu

Recent Posts

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

2 hours ago

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…

5 hours ago

இட்லி கடை: 1 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

6 hours ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி.!!

கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…

6 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

6 hours ago

அருணிடம் விஷயத்தை சொன்ன சீதா.. முத்து எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…

9 hours ago