Bharathi Kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா.
இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மா மற்றும் தனது குழந்தைகளை தேடி செல்லப் போவதாக சொன்ன சௌந்தர்யா எங்குன போய் தேடுவ எங்க இருக்காங்கன்னு தெரியலையே என சொல்ல அகிலனும் எங்கேயும் போக வேண்டாம் ஏதாவது தகவல் கிடைக்கும் என சொல்ல பாரதி அதை ஏற்க மறுக்கிறார். கண்ணம்மாவை தப்பா நினைச்சது நான் என்னால தான் அவ இவ்வளவு கஷ்டப்படுற நான் அவங்கள தேடி வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன் என சொல்ல பாரதியின் அப்பா அவனை தடுக்காத அவன் எடுத்த முடிவு சரிதான் என சொல்லி வழி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் கண்ணம்மா ஊரில் உள்ள ஒருவரை சந்தித்து வீடு வாடகைக்கு கேட்க அவர் நம்ம ஊரு ஆளுங்க உங்களுக்கு இல்லாததா என சொல்லி வீட்டு சாவியை கொடுக்கிறார். அந்த நபரின் மகளாக பிக் பாஸ் தாமரை செல்வி என்ட்ரி கொடுத்து நடித்துள்ளார்.
அடுத்து ரோடு ரோடாக கண்ணம்மாவை தேடி அலைய அப்போது கண்ணம்மாவின் சித்தியின் தம்பி பாரதியை பார்த்து என்ன கண்ணம்மாவை தேடுறீங்களா என கேட்க ஆமா உனக்கு எப்படி தெரியும் என சொல்ல அவர் கண்ணம்மா குழந்தைகள் மட்டுமல்ல எங்க மாமாவையும் அதுதான் உங்க மாமனாரையும் காணும் எல்லோரும் சேர்ந்து தான் ஊரை விட்டு போய் இருக்காங்க என விஷயத்தை சொல்லி நானும் உங்க கூட சேர்ந்து தேடட்டுமா என கேட்க பாரதியும் சரி என கூறுகிறார்.
அடுத்து கண்ணம்மா எங்க தான் போயிருப்பா என கேட்க பாரதி தெரியலையே என சொல்ல ஒருவேளை கண்ணம்மா ஒரு ஊர்ல இருந்தாங்களே அதே ஊருக்கு போய் இருக்கலாம் இல்ல என்ன சொல்ல பாரதி இது எனக்கு தோணவே இல்லை என சொல்லி அந்த ஊருக்கு தேடிச் செல்கின்றனர்.
இந்த பக்கம் கண்ணம்மா ஊரில் வாடகைக்கு வீடு எடுத்த நிலையில் அடுத்து ஊர் மக்களை சந்தித்து பேசுகிறார். அப்போது ஊர் பெரிய மனுஷங்க உன்னுடைய அப்பா வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொன்னாரு இனி உனக்கு எந்த பிரச்சனையும் வராது நாங்க பார்த்துக்கிறோம் உனக்கு என்ன வேலை தெரியும் என்னை ஏது என விசாரித்து ஊரிலேயே வேலை செய்ய வழி செய்து கொடுக்கின்றனர். பிறகு குழந்தைகளையும் இது ஸ்கூலில் சேர்த்து விடு என சொல்ல கண்ணம்மா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…