பாரதியைப் திட்டிய வெண்பா.. ஹேமா எடுத்த முடிவு.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வீட்டில் அக்கறை சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவர் ஆகியோர் அமர்ந்து பாரதி கண்ணன் மாமியோட ஹேமாவை பழக விடாதீங்க என சொன்னதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதன் பின்னர் பாரதி வெண்பாவுக்கு போன் செய்ய ஏற்கனவே மாயாண்டி யால் கடுப்பில் இருக்கும் வெண்பா பாரதியிடம் கோபமாக பேசுகிறார். அந்த ஹேமா எங்க அம்மா எல்லாரும் என்ன வச்சி செய்யுங்க திரும்பத் திரும்ப நான் உனக்காக வந்து நிக்கணுமா? என்ன பாத்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா? என்னை முழு முட்டாள் முடிவு பண்ணிட்டியா. இப்ப எதுக்கு எனக்கு போன் பண்ணு உங்க வீட்ல யாராவது ஏதாவது உன்னை திட்டினேனா அதுக்காக எனக்கு போன் பண்ணி புலம்ப வந்தியா என்று பயங்கரமாக விடுகிறார். என்ன பத்தி என்ன வேணாலும் பேசு ஆனா எங்க வீட்ல இருக்கு உங்கள பத்தி பேசாத என பாரதி கோபப்படுகிறார். அப்படித்தாண்டா பேச்சுக்கு என்ன பண்ணுவேன் என சொல்வது மட்டும் அல்லாமல் பாரதியை குடிகாரன் என்று திட்டுகிறார். இதனால் கடுப்பான பாரதி உனக்கு போன் பண்ண பாரு என திட்டி விட்டு போனை வைத்து விடுகிறார்.

இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த ஹேமா வெண்பா ஆண்ட்டி இப்படி சண்டை போடுறாங்க என யோசிக்கிறார். இதை சாதகமாக வைத்துக்கொண்டு சௌந்தர்யா இந்த வெண்பாவிற்கு இதே வேலையா போச்சு எப்ப பாத்தாலும் பாரதியோட சண்டை போட்டு அவனுடைய நிம்மதியைக் கொடுக்கிறதையே வேலையா வச்சிருக்கா. நல்லவேலை இவ பார்வதிக்கு துணையாக வரல என சொல்லிவிட்டு கீழே செல்கிறார். பிறகு ஹேமா பாட்டி சொல்றது சரிதான் டாடிக்கு வெண்பா சுத்தமா செட்டாக மாட்டாங்க எனது முடிவு எடுக்கிறார்.

இந்தப் பக்கம் கண்ணம்மா லட்சுமியோடு தூங்கி கொண்டிருக்க திடீரென எழுந்த லட்சுமி அம்மா நல்லா தூங்குறாங்க இப்போ ரேஷன் கார்ட்டை தேடி எடுக்கலாம் முடிவு செய்து பெட்டியைத் திறந்து தேடுகிறார் இந்த நேரத்தில் கண்ணம்மா கண்விழித்து என்ன தேடுற எனக்கு தலை வலிக்குது அதனால தைலம் தேடுகிறேன் என பொய் சொல்கிறார். இந்த வயசுல தைலம் தேய்க்க கூடாது என கண்ணம்மா போய் படுத்து தூங்கு சொல்கிறார். லட்சுமி எதையோ தேடுகிறாள் என்பதை கண்ணம்மா புரிந்து கொள்கிறார்.

பிறகு குமார் அண்ணா லஷ்மியின் ஸ்கூலுக்கு கூட்டிச் செல்லும்போது லட்சுமி கோவில் ஒன்றை பார்த்துவிட்டு ஆட்டோவை நிறுத்தச் சொல்லி அடம் பிடிக்கிறார். வேறு வழியில்லாமல் குமாரனாகவும் ஆட்டோவை நிறுத்த சாமியிடம் சென்று உங்க அப்பாவை பத்தி கேக்க மாட்டேன்னு அம்மாகிட்ட சொன்னாலும் அவர் யாருமே என்கிட்ட நீ என் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. தயவுசெய்து எங்க அப்பா யாருன்னு எனக்கு காட்டு என சாமியிடம் கண்கலங்கி அழுகிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த குமார் அண்ணா கண்ணம்மாவிடம் இது பற்றி சொல்ல அந்த நேரத்தில் வாய்தா வடிவுக்கரசியும் வந்துவிடுகிறார். லட்சுமி கொஞ்ச நாளாகவே ஒரு மாதிரி இருப்பதையும் நைட்டு கூட எதையோ தேடியதையும் கண்ணம்மா சொல்கிறார். அப்பாவை தேடத்தான் அவ முயற்சி செய்கிறார். இது ரொம்ப சீரியஸான விஷயம் என வாய்தா வடிவுகரசி சொல்கிறார். கண்ணம்மா லட்சுமியை நினைத்து வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 10.03.22
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago