கண்ணம்மா வீட்டிற்கு வந்த ஹேமா.. பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாரதியிடம் விவாகரத்து பற்றி பேச வந்த வெண்பாவிடம் அதைப்பற்றி பெரிதாக பேசாமல் வேலையில் கவனம் செலுத்துகிறார். திரும்பத் திரும்ப இதைப்பற்றி பேச இப்போ கூட பேச எனக்கு நேரமில்லை வேலை இருக்கிறேன் என பாரதி சொல்லிவிடுகிறார். குடும்பத்துடன் இதைப்பற்றி பேசுறதால நான் என் முடிவை மாற்றிபேனோனு தோணுது என சொல்கிறார். வெண்பா நீ முடிவை மாற்றிப்பியோனு எனக்கு பயமாயிருக்கு என கூறுகிறார். பாரதி இதைப் பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்.

இந்த பக்கம் வீட்டில் காய்கறி வெட்டி கொண்டிருக்க நேரத்தில் ஹேமா வீட்டிற்குள் நுழைய அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைகிறார் கண்ணம்மா. உள்ளே வந்த ஹேமா லட்சுமி எங்க என கேட்க அவ வீட்ல விளையாடிட்டிருக்கா இரு கூப்பிடுறேன் என கண்ணம்மா கூறுகிறார். அப்போ நீங்க மட்டும் தான் தனியா இருக்கீங்களா என கேட்டு தன்னுடைய தோழியின் அப்பா அம்மா விவாகரத்து செய்த விஷயத்தை கூறுகிறார் ஹேமா. கல்யாணம் ஆனவங்க இன்னொரு கல்யாணம் பண்ணனும்னா விவாகரத்து பண்ணனுமாமே. லட்சுமியோட அப்பாதான் வரமாட்டார் இல்ல அப்போ நீங்க அவர விவாகரத்து பண்ணிட்டு எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கங்க. லட்சுமியும் எங்க அப்பாவை டாக்டர் அப்பானு கூப்பிடவா நாம நாலு பேரும் ஒரே வீட்டில் இருக்கலாம். நமக்குள்ள சண்டையே வராது. நிறைய நாள் சமையல் அம்மாவுக்கு அம்மாவா இருந்தா நல்லா இருக்கும்னு யோசித்திருக்கிறேன். நீங்க மட்டும் ஓகே சொன்னா அது நடந்துவிடும் என கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட கண்ணம்மா பதில் சொல்ல முடியாமல் அதிர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் லட்சுமி உள்ளே வந்து எப்ப வந்த ஹேமா என்ன கேட்கிறார். இருப்பியா கிளம்பிடுவியா என கேட்க இன்னைக்கு இங்க தான் இருக்க போகிறேன் என ஹேமா கூறுகிறார். ஐ ஜாலி சரி வா விளையாடலாம் என ஹேமாவை கூப்பிடுகிறார் லட்சுமி. ஏன்னா நான் சொன்னதை யோசிச்சு பாருங்க என சொல்லிவிட்டு செல்கிறார்.

பாரதி ஹாஸ்பிடலில் இருக்கும் போது அவரை தேடி அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார். அது வெண்பாவை போன் காலிலேயே பதற வைத்த நபர் ரேகா தான். பாரதியை பார்க்க வந்த அவர் விவாகரத்து பற்றி கேட்கிறார். விவாகரத்துக்குப் பிறகு என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க எனக்கேட்டு கல்யாண பத்திரிகைகளை எடுத்து வைக்கிறார். கல்யாணம் பற்றி பேசுகிறார். இதனால் குழப்பான பாரதி யார் நீங்க எதுக்கு தேவை இல்லாம பேசிட்டு இருக்கீங்க என கேட்க கடைசியில் வெண்பா உங்கள கல்யாணம் பண்ணிக்க பத்து வருஷமா காத்து கொண்டு இருக்கா.. அவளுக்கும் உங்களுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கு? அவங்களுக்கு தோழியா? காதலியா? இல்ல மனைவியா வரப்போறவளா? என கேட்க பாரதி அதிர்ச்சி அடைகிறார். ஒரு அஞ்சு நிமிஷம் என பாரதி போனை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறார். சீக்கிரம் வாங்க ஐ அம் வெயிட்டிங் என ரேகா சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 08.04.22
jothika lakshu

Recent Posts

Bison – Poison ? Ameer Speech Bison Thanks Meet

https://youtu.be/hvOcBNB9q5M?t=1

33 minutes ago

Mari Selvaraj Speech Bison Thanks Meet

https://youtu.be/V8EF1lKofzs?t=1

35 minutes ago

Pa Ranjith Speech Bison Thanks Meet

https://youtu.be/XH3vQluc4Eo?t=518

38 minutes ago

Aaru Arivu Movie Audio Launch | Ambedkar | Thol Thirumavalavan

https://youtu.be/VRvtIfqauzI?t=7

41 minutes ago

பைசன் : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

2 hours ago

குழந்தை பெத்துக்கச் சொல்லும் அம்மாச்சி, நந்தினி பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago