சௌந்தர்யாவிடம் சவால் விட்ட வெண்பா.. ஹேமா எடுக்கும் முடிவு.. பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டதால் வாந்தி எடுத்த ஹேமாவிடம் சௌந்தர்யா எல்லாம் அந்த வெண்பா கொடுத்த சாப்பாட்டால் தான் இப்படி ஆனது. இத்தன நாளா சமையல் அம்மா சாப்பாட்டை சாப்பிட ஏதாவது ஆச்சா? அந்த வெண்பாவிற்கு சமைக்கவே தெரியாது அவளை மூணு வேலையும் ஹோட்டல்ல வாங்கி சாப்பிடுவா, அத நீ சாப்பிட்டு இப்படி உடம்பை கெடுத்துக்கிற, நல்ல வேலை இந்த மாதிரி ஆளு பாரதிக்கு மனைவியா வரல. அப்படி மட்டும் நடந்திருந்தால் பாரதியும் ஹேமாவும் வாந்தி எடுத்து உடம்பை கெடுத்து கிட்டு இருப்பாங்க. நாளைக்கு திரும்பவும் அந்த வெண்பா எதைக் கொண்டு வந்தாலும் நீ வேண்டாம்னு முகத்துக்கு நேரா சொல்லிடு. இப்படி உடம்பைக் கெடுத்துக் கொண்டு வந்து விடாதே என சௌந்தர்யா சொல்ல சரி பாட்டி என எனக் கூறுகிறார். வெல் வாய்விட்டு சமைக்கவே தெரியாது அவங்க எப்படி டாடிய பாத்துப்பாங்க. அவங்க இதுக்கு சரியா வர மாட்டாங்க என் முடிவு செய்கிறார் ஹேமா.

இந்த பக்கம் வெண்பா கண்ணம்மா அடி கொடுத்ததை நினைத்து கடுப்பில் இருக்கிறார். அந்த நேரத்தில் சாந்தி வர அவரிடம் சொல்லி புலம்புகிறாராம். பிறகு சாந்தி விடுங்க திரும்ப வாய்ப்பு கிடைக்கும்போது திருப்பிக் கொடுக்கலாம். ஆனா நீங்க ஜெயிச்சுட்டு இங்க அந்த வெண்பா சுமையில் அம்மா சாப்பிட வேணாம்னு சொல்லிட்டு உங்க சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கா. இதே மாதிரி விதவிதமான சாப்பாடு வாங்கிக் கொடுத்து அவளை கரெக்ட் பண்ணுங்க என கூறுகிறார்.

மறுநாள் காலையில் ஹேமா ஸ்கூலுக்கு கிளம்பி வந்து நிற்கிறார். எனக்கு மதியம் லஞ்ச் நீங்களே கட்டி கொடுத்துடுங்க ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்கிறார். சரி என சௌந்தர்யாவும் லஞ்ச் கட்டிக் கொடுத்து அனுப்பி வைக்கிறார். பிறகு சௌந்தர்யாவும் ஹேமாவும் காரில் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்கின்றனர். நீ எதுக்கு ஹேமாவுக்கு சாப்பாடு கொடுக்க போன எனக்கேட்க எல்லாம் அக்கறைதான் பாரதியை எனக்கு பிடிக்கும் அதனால உங்களுக்கு பிடிக்கும் அப்படித்தான் ஹேமாவையும் பிடிக்கும் என சொல்கிறார்.

அதெல்லாம் சரிதான் ஆனால் திடீர் அக்கறை ஏன் என கேட்க பாரதி என்கிட்ட அடிக்கடி புலம்பி கொண்டே இருப்பான் ஹேமாவை சரியா பாக்க முடியலனு, அதனாலதான் நான் லஞ்ச் கொண்டு போய் கொடுத்தேன் என கூறுகிறார். எப்பயும் ராங் ரூட்டில் தான் வருவியா என சௌந்தர்யா கேட்க அப்போதான் போக வேண்டிய இடத்துக்கு சீக்கிரமா போய் சேர முடியும் என கூறுகிறார். இப்படியே இருவரும் மாறி மாறி வசனம் பேசிக் கொள்ள நீ என்னதான் திட்டம் போட்டாலும் அதை நான் முறியடிப்பேன் என சௌந்தர்யா கூறுகிறார். அப்படியா இதுவரைக்கும் வெண்பா கிட்ட மோதினவங்க தோற்றுத்தான் போயிருக்காங்க. இப்ப நீங்க என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என சொல்கிறார்.

பிறகு வெண்பா அங்கிருந்து கிளம்ப சௌந்தர்யா அவரை ஃபாலோ செய்கிறார். நேராக ஸ்கூலுக்கு செல்கிறார் வெண்பா. கையில் சாப்பாட்டோடு கண்ணம்மா காத்துக்கொண்டிருக்க வெண்பா வந்து இறங்கியதைப் பார்த்து கடுப்பாகிறார். வாங்கின அடி போதாதா? இன்னும் அடி வேணுமா? திரும்பவும் எதுக்கு வந்த கையில என்ன என கேட்க லஞ்ச் என கூறுகிறார்.

இந்த நேரத்தில் ஸ்கூல் பெல் அடிக்க ஹேமா வந்துவிடுகிறார். சமையல் அம்மா என ஓடி வருகிறார். இந்தா இன்னைக்கும் உனக்கு வைத்துக் கொண்டு வந்து இருக்கேன் என்ன சொல்ல நான் ஏதோ ஒரு நாள் கொண்டு வந்தீங்கன்னு நெனச்சேன் என கூறுகிறார். இன்னைக்கு மட்டன் பிரியாணி, வஞ்சரம் வருவல் கொண்டு வந்திருக்கேன் என சொல்கிறார். ஹேமா வாந்தி எடுப்பது எல்லாம் சோதித்துப் பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 07.03.22
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago