வெண்பாவை கடுப்பேத்திய மாயாண்டி.. குழந்தைகளுடன் விளையாடிய பாரதி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. காலில் லட்சுமி மற்றும் ஹேமாவை கூட்டிக்கொண்டு கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார் பாரதி. எதிரில் ஆட்டோவில் கண்ணம்மா லட்சுமி தேடி வந்து கொண்டிருக்கிறார். ஆட்டோவை பார்த்த அம்மா சமையல் அம்மா என சத்தம் போட ஹேமா என பதிலுக்கு குரல் கொடுக்கிறார் கண்ணம்மா. பிறகு கண்ணம்மா ஆட்டோவிலிருந்து இறங்கி வர லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் காரில் இருந்து இறங்குகின்றனர். பொய் சொல்லிட்டு அப்படி எங்க போன என லட்சுமி திட்டி அழைக்கிறார் கண்ணம்மா. டாக்டர் அங்கிளை பார்த்து பேச போயிருந்தேன் என லட்சுமி கூறுகிறார். உனக்கு கொழுப்பு அதிகம் ஆயிடுச்சு நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் வெளுத்திடுவேன் பார்த்துக்கோ எனத் திட்டுகிறார். ஆட்டோல ஏறு என சொல்ல ஹேமா லட்சுமி கார்லயே வரட்டும் நீங்களும் எங்களோடு வாங்க என கூறுகிறார். வேண்டாம் நாங்க இப்படியே கிளம்புறோம் என கண்ணம்மா சொல்ல சமையல் அம்மா ப்ளீஸ் என கெஞ்சுகிறார்.

பிறகு காரில் கண்ணம்மா ஏறப் போக இங்கே இல்லை முன்னாடி உட்காருங்க சமையல் அம்மா என் முன்னாடி சீட்டில் உட்கார வைக்கிறார் ஹேமா. வீட்டிற்குப் போனதும் குழந்தைகளை விளையாடச் சொல்லிவிட்டு கண்ணம்மாவிடம் பேசுகிறார் பாரதி. நான் வாழ்ந்து காட்டுவேன் வாழை மரத்தை நட்டு காட்டுவேன்னு வசனம் பேசினால் போதாது குழந்தையை நல்லபடியாக மறக்கணும் அதுதான் நல்ல அம்மாவுக்கு அர்த்தம் என சத்தம் போடுகிறார்.

குழந்தைக்கு துணிமணி வாங்கி மூணு வேளை சாப்பாடு போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி வச்சுட்டா போதாது அவ எங்க இருக்கா என்ன பண்றான்னு கவனிக்கணும். ரோட்டில் வேடிக்கை பார்த்துட்டு வந்து கார் மேல விழுந்தா நான் இருக்கவே பிரேக் போட்டு விட்டேன் வேறு யாராக இருந்திருந்தால் புள்ளைக்கு என்ன ஆகி இருக்கும்னு யோசிச்சு பாரு என திட்டுகிறார். கண்ணம்மா சிரிக்க பாரதி நான் உன்னை திட்டிட்டு இருக்கேன் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சிரிக்கிற என கூறுகிறார்.

இப்பதான் லட்சுமிக்கு பொறுப்பான அப்பாவா பேசுறீங்க சந்தோஷமா இருக்கு என கண்ணம்மா சொல்ல அப்பாவா தெரிந்தால் இருந்துட்டு போகட்டும் அதனால என்ன என பாரதி சொல்ல கண்ணம்மா சந்தோஷம் அடைகிறார். என்ன சொன்னீங்க திரும்பவும் ஒரு முறை சொல்லுங்க என கண்ணம்மா கேட்க ஒன்னும் இல்லை என கூறி விடுகிறார் பாரதி.

பிறகு கீழே வந்த அவர் லட்சுமி எங்க அப்பாவை தேடி கண்டு பிடிப்பேன் என அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து வருத்தப்படுகிறார். லட்சுமிக்கு சாக்லேட் எடுத்துக்கொடுத்து சந்தோஷப்படுகிறார். பிறகு இரண்டு குழந்தைகளையும் கொஞ்சுவதை பார்த்த மாயாண்டி இதனை போட்டோ எடுத்து கொள்கிறார். பிறகு பாரதி அங்கிருந்து கிளம்புகிறார்.

இந்த பக்கம் வெண்பா ஹேமாவை கரெக்ட் செய்து பாரதியை கல்யாணம் பண்ணிக்க போறேன் என சாந்தியிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் மாயாண்டி போன் செய்து பாரதி கண்ணம்மா வீட்டில் பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோஷமாக கொஞ்சம் விளையாடிகிட்டு இருக்கார் என சொல்ல நீ சும்மா சொல்ற என வெண்பா நம்பவில்லை. நீங்க நம்ப மாட்டீங்கன்னு உங்களுக்கு போட்டோ அனுப்பி இருக்கேன் பாருங்க என போட்டோவை அனுப்புகிறார். இதனை பார்த்த வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 03.03.22
jothika lakshu

Recent Posts

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

36 minutes ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

40 minutes ago

வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

44 minutes ago

மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்..இதோ உங்களுக்காக..!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…

1 hour ago

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

Nee Forever – Official Trailer

https://youtu.be/Z-GvjDHlboE?si=gvivktj3desLdtBx

2 hours ago