சிவகாமிக்கு நடந்த ஆபரேஷன்.. சந்தியா சரவணனிடம் மன்னிப்பு கேட்ட சிவகாமி.. இன்றைய ராஜா ராணி 2 பாரதி கண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேர எபிசோடாக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடு சிவகாமியை சென்னைக்கு அழைத்து வந்த பாரதி அவருக்கு சிகிச்சை அளித்து ஆபரேஷன் செய்து உயிர்பிழைக்க வைக்கிறார். சிவகாமிக்கு ஆபரேஷன் என்பதால் சரவணன் ஒரு பக்கம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க சிவகாமியின் கணவர் ரவி இன்னொரு பக்கம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இவர்கள் இருவரையும் சமாதானம் செய்கிறார் சந்தியா.

அதன் பிறகு சிவகாமிக்கு ஆப்ரேஷன் முடிந்து அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பாரதி சொன்னது அனைவரும் உள்ளே சென்று சிவகாமியை பார்க்கின்றனர். சிவகாமி உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் ஊரே உங்களை எதிர்த்து இருந்தாலும் நான் உங்களை நம்பி இருக்கணும். என்னை மன்னிச்சிடுங்க என மன்னிப்பு கேட்கிறார். இந்த இடத்துல யாரா இருந்தாலும் இப்படித்தான் பண்ணி இருப்பாங்க அதுக்காக நீங்க மன்னிப்பு கேட்க வேண்டாம் என சரவணன் சந்தியா கூறுகின்றனர். நீதான் என் வீட்டு மூத்த மருமகள் என் வீட்டு காக்க வந்த குலதெய்வம் என சிவகாமி சந்தியாவை பாராட்டுகிறார். நீ என் பையன் நீ மட்டும் தான் என் பையன் என சரவணனிடம் கூறுகிறார் சிவகாமி.

பிறகு பாரதி கண்ணம்மாவுக்கும் சிவகாமி நன்றி சொல்ல நீங்களும் எனக்கு அம்மா மாதிரி தான் எனக்கு இதுக்கு நன்றி சொல்லுங்க என பாரதி கூறுகிறார். நீங்க சரவணன் சந்தியாவை ஏத்துக்கிட்டது போதும் அதுவே எங்களுக்கு பெரிய சந்தோஷம் என கண்ணம்மா கூறுகிறார். எத பத்தியும் கவலைப்படாம ரெஸ்ட் எடுங்க என சொல்கிறார்.

இந்த பக்கம் வீட்டில் ஹேமா வருத்தத்தோடு இருக்க அப்போது வந்த சௌந்தர்யா என்ன ஆச்சு என விசாரிக்க சமையலம்மா காணாம போயிருந்த போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. எனக்கு என்னுடைய அம்மாவுடைய ஞாபகம் வந்தது. அவங்க போட்டோவையாவது எனக்கு காட்டுங்க அவங்கள பாக்கணும் போல இருக்கு என கேட்க சௌந்தர்யா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். நீ அம்மா போட்டோ பார்த்தா ரொம்ப பீல் பண்ணுவேனு தான் உங்க அப்பா காட்டாம இருக்கான், நீ அவன்கிட்டயே கேளு என கூறுகிறார்.

பிறகு ஹேமா சௌந்தர்யாவுடன் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். சௌந்தர்யா சிவகாமி குறித்து நலம் விசாரித்து பின்னர் நாளைக்கு ஹேமாவின் பிறந்தநாள் என்பதால் ஒரு பங்க்ஷன் வச்சிருக்கோம் அதுக்கு நீங்க குடும்பத்தோட வரணும் என அழைப்பு விடுக்கிறார். சந்தியா சரவணன் எனக்கும் கல்யாண நாள் என ரவி சொல்ல இரண்டு பங்க்ஷனையும் ஒன்றாக சேர்த்து நடத்திடலாம் என பாரதி கூறுகிறார்.

அதன் பிறகு ஹேமாவிடம் சந்தியா உனக்கு என்ன கிப்ட் வேண்டும் என கேட்க நீங்க எல்லோரும் வந்தா மட்டும் போதும் அதுவே எனக்கு பெரிய கிப்ட் தான் என கூறுகிறார். அது மட்டுமல்லாமல் எனக்கு தேவையான கிஃப்ட் டாடியால மட்டும் தான் தர முடியும் என சொல்ல பாரதி அப்படி என்ன கிப்ட் என கேட்க முதல்ல நீங்க கண்டிப்பா செய்வேனு என் மேல சத்தியம் பண்ணுங்க என்ன ஹேமா கேட்க பாரதி ஹேமாவின் மீது சத்தியம் செய்யாமல் தன் மீது சத்தியம் செய்து கொள்கிறார். பிறகு ஹேமா அம்மாவின் போட்டோவை காட்டுங்க என கேட்க பாரதி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

bharathi-kannamma-and-raja-rani serial episode-update
jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

4 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

4 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

5 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

5 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

5 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

5 days ago