பாரதியை கலாய்த்த மது. கண்ணம்மா கொடுத்த கிப்ட். இன்றைய பாரதிகண்ணம்மா 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாரதி கண்ணம்மாவிற்கு மருந்து போடும்போது கண்ணம்மா துடிப்பதை பார்த்து தவிக்கிறார். பிறகு நானே மருந்து போட்டு விடுகிறேன் என மருந்து போட அப்போதும் கண்ணம்மா வலியில் துடிக்க அவளை திசை திருப்ப ஒரு கதை சொல்லி மருந்து போட இதை கவனித்த மது பாரதியை கலாய்க்கிறார்.

அதன் பிறகு பாரதி நான் அப்படியே அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு மசாலா கம்பெனிக்கு கிளம்புறேன் என சொல்ல மது கண்ணம்மா வாழ்த்து சொல்வது மட்டுமல்லாமல் ஒரு நிமிஷம் என சொல்லி கண்ணம்மா கிப்ட் எடுத்து வந்து பாரதியிடம் கொடுத்து இனி நீ இந்த ஆஸ்டின் முன்னாடி தான் தம் அடிக்கணும் என சத்தியம் வாங்குகிறார்.

அதை பிரித்து பார்க்கும்போது ஒரு பெண்மணி போல இருப்பதை பார்த்து என்ன இது என கேட்க அதுதான் உங்க அம்மா என சொல்ல பாரதி தம்மடிக்க கூடாதுன்னு மறைமுகமாக சொல்கிறாய் என நினைக்க கண்ணம்மா இனிமே எப்படி தம் அடிக்கிறேனு பார்க்கிறேன் என நினைக்கிறார். எல்லோரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த வெண்பா முதலில் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என சவால் விட்டுக் கொள்கிறார்.

அதன் பிறகு கண்ணம்மா கிளாசில் இருக்க வெளியே நின்று பாரதி சிகரெட் பிடிக்க முயற்சி செய்ய சௌந்தர்யா வந்து டேய் என்னடா பண்ற என குரல் கொடுப்பது போல இருந்து சிகரெட்டை தூக்கி போடுகிறார். பிறகு திரும்பவும் சிகரெட் பிடிக்க முயற்சி செய்ய அப்போது கண்ணம்மா பார்க்க உடனே அந்த சிகரெட்டை தூக்கி வீசிகிறார்.

பிறகு இவ என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்றான்னு பாரதி கண்ணம்மாவை சைட் அடிக்க தொடங்க கண்ணம்மா ஓரக்கண்ணால் பார்க்க இருவருக்கும் இடையே காதல் பார்வைகள் அலைபாய்கிறது. அதன் பிறகு கண்ணம்மா சைகையில் பாரதியை கம்பெனிக்கு கிளம்ப சொல்ல பாரதி கிளம்பியதும் பிள்ளைகள் சத்தம் போட கண்ணம்மா அடிப்பட்ட கையை டேபிளில் தட்ட பிறகு வலியில் துடிக்க பாரதி பரிதாபப்படுகிறார்.

பிறகு வாட்டர் பாட்டிலை திறக்க முடியாமல் கஷ்டப்பட அந்த வழியாக வரும் சண்முக வாத்தியார் பாட்டிலை திறந்து கொடுத்து மாத்திரை போட்டியா கட்டு மாத்துனியா என விசாரித்து விட்டு செல்ல கண்ணம்மா சந்தோசத்தில் கண்கலங்குகிறார். இதை பார்த்து பாரதி இவ என்ன அப்பா நலம் விசாரிக்கிறதுக்கே இப்படி பீல் பண்றா என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma 2 serial episode update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

1 day ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

1 day ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

1 day ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

1 day ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

1 day ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago