அருகம்புல் சாறு எடுத்து குடித்து வந்தால் உடலிலுள்ள பல வியாதிகள் குணமாகும். அருகம்புல்லை சுத்தமான தண்ணீரில் போட்டு நன்கு கழுவிய பிறகே அதனை பயன்படுத்த வேண்டும்.
அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ உள்ளது. இதனை சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அருகம்புல் சாறு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த சோகை, இரத்த அழுத்தம் போன்றவற்றை சரி செய்கிறது.
அருகம்புல் சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். மேலும் வாயுத்தொல்லை நீங்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் பிரச்சினைகளுக்கு அருகம்புல் சாறு நல்ல மருந்தாக பயன்படும். அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.
தினமும் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக வெளியேறிவிடும்.
அருகம்புல் ஜூஸ் குடிப்பவர்களுக்கு சிறுநீர் நன்கு பிரிந்து சிறுநீரகங்களில் கற்கள் சேராமல் தடுக்கும். அருகம்புல்லில் கால்சியம், மெக்னீசியம் உள்ளதால் தினந்தோறும் அதனை குடித்து வந்தால் எலும்புகள் உறுதியாக இருக்கும்
நுண்கிருமிகளால் தோலில் படை, புண் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் அறுகம்புல் சாறு அருந்தினால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் விரைவில் குணமாகும்.
புளிப்பில்லாத கெட்டி தயிரில் அருகம்புல் சாறு 50 மில்லி கலந்து காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…