Benefits of rocksalt
இந்துப்புவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே நாம் உணவுகளில் உப்பு சேர்ப்பது வழக்கம். உப்பில்லா பண்டம் குப்பைக்கு என்று பழமொழி அனைவருக்கும் தெரியும். உணவின் சுவையை கூட்டுவதில் உப்பு மிகவும் பயன்படுகிறது. ஆனால் இந்துப்பு பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதில் பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு போன்ற ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை இந்துப்பு சேர்த்து குடித்து வந்தால் புத்துணர்ச்சியாக இருப்பது மட்டுமில்லாமல் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு பதற்றத்தைக் குறைக்கிறது.
மேலும் சருமத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் திசுக்களை வலிமையாகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் துத்தநாகம் அதிகமாக இருப்பதால் உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்ட உதவுகிறது.
மேலும் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.
குறிப்பாக செரிமானப் பிரச்சனையிலிருந்து விடுபடவும் சீரான குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது. சைனஸ் மற்றும் இருமல் பிரச்சனை இருப்பவர்களுக்கும் இந்த நீரை கொதிக்க வைத்து நீராவியாக பிடிக்கலாம்.
எனவே இந்துப்புவின் ஆரோக்கியத்தை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…