Categories: Health

உடலிற்கு பல நன்மைகளை வாரி வழங்கும் நாட்டு சர்க்கரை !

இயற்கையான முறையில் கரும்பு சாற்றிலிருந்து தயார் செய்யப்படுவதால், இயற்கையாகவே நாட்டு சர்க்கரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே உடலிற்கு பல நன்மைகளை தருகின்றன.

வெள்ளை சர்க்கரையில் உள்ள சில வேதிப்பொருள்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை பயன்படுத்துவது நல்லது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் இனிப்புகளை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்க்கலாம். இதில் குறைந்த அளவில் கலோரிகள் உள்ளதால் உடல் எடை குறைய உதவுகிறது.

வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்பு உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்த்துக்கொண்டால் குடல்களை பலப்படுத்தி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் இருக்க உதவும்.

கிருமிகளால் உடலில் நோய்கள் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தான். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவக்கூடியது நாட்டு சர்க்கரை. எனவே நாட்டு சர்க்கரையை உணவில் சேர்ப்பது நல்லது.

admin

Recent Posts

Manithan Deivamagalam Official Trailer

Manithan Deivamagalam Official Trailer | Selvaraghavan | Kushee Ravi | Dennis Manjunath

5 minutes ago

Kathanar Official Trailer

Kathanar Official Trailer (Tamil) | Jayasurya | Anushka Shetty | Rojin Thomas | Gokulam Gopalan

10 minutes ago

Once More Indra Song

Once More Indra Song - Arjun Das | Sona Olickal | Hesham | Hanan Shaah…

14 minutes ago

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago