மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினசரி சிறிதளவு திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர வேண்டும். நாம் தினசரி சாப்பிடுகின்ற உணவு வகைகளில் மற்றும் சமையலுக்கு பயன் படுத்துகின்ற எண்ணெய்களில் கொழுப்பு சத்து அதிக அளவில் உள்ளது.
திராட்சை பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு அதிக அளவில் சேராமல் பாதுகாக்கிறது.
பொட்டாசியம் சத்து இதில் அதிக அளவில் உள்ளது. எனவே இந்த பொட்டாசியம் உடலில் ஓடுகின்ற ரத்த அழுத்தத்தினை சீராக்குகிறது. மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
வயது முதிர்ந்து விட்டால் கண் பார்வை சிறிது சிறிதாக மங்கத் தொடங்கும். எனவே அவர்கள் சத்து நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் அவசியமாகும்.
திராட்சைப்பழம் கண்களின் கரு விழிகளில் உள்ள செல்கள் வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே கண் பார்வை தெளிவாகும். மேலும் இது கண் அழுத்தம் சம்பந்தமான நோய்கள் கண்களில் புரை ஏற்படுவது போன்றவற்றை போக்குகிறது.
நமது உடல் சோர்வடையும் போதும், சூழ்நிலை காரணமாக பதற்றமடையும்போதும் உடல் நலத்தை பாதிக்கக்கூடிய ஒரு சில ரசாயன மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுகின்றது. அச்சமயங்களில் மன அழுத்தம் ஏற்படுகின்றது. திராட்சைப்பழம் இந்த கெட்ட ரசாயனத்தை கட்டுப்படுத்துகிறது. எனவே இது உடல் மற்றும் மனதிற்கு சிறந்த மருந்தாக உள்ளது.
தொற்று நோயினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். நுண் கிருமிகள் வைரஸ் பாக்டீரியா போன்றவற்றை அழிக்கும் திறன் திராட்சைப் பழத்துக்கு உள்ளது. எனவே தினம்தோறும் திராட்சை பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
திராட்சைபழத்தினை அப்படியே சாப்பிடுவதாலும் மற்றும் இதனை நன்கு காயவைத்து உலர்திராட்சையாக சாப்பிடுவதாலும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் நலத்துடன் இருக்க முடியும். எனவே சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் எளிதில் வராது. சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமழும் தடுக்கும்.
சர்க்கரை நோய்க்கு திராட்சை மிகவும் நல்லது. தினசரி காலையில் ஒரு கைப்பிடி அளவு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…